TNL Onstage 2015 பருவக்காலத்திற்கு Hutch அணுசரணை

பதிவிறக்கம் செய்க

இலங்கையில் 3G புரோட்பாண்ட் சேவைகளை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் நிறுவனங்களுள் ஒன்றான Hutch Sri Lanka, உள்நாட்டில் இசைத்துறைக்கு ஆதரவளிக் ஒரு முயற்சியாக, TNL Onstage பருவகாலம் 2015 இற்கு ‘உத்தியோகப்பூர்வ இன்நெட் சேவை வழங்குனராக’ செயற்பட முன்வந்துள்ளது. தனிப் பாடகர்கள் மற்றும் இசைக் குழுவினர் உட்பட, வளர்ந்துவரும் இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிக்காண்பிக்கும் ஒரு மேடை வாய்ப்பினை ‘TNL Onstage’ வழங்கி வருகின்றது.

இலங்கையிலுள்ள இளம் சமுதாயத்தினர் தமது ஆற்றல்கள் முற்றுமுழுதாக வெளிப்படுத்தி வெற்றி காண இடமளிக்கும் வகையில் ஏராளமான நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதில் HUTCH Sri Lanka எப்போதும் முன்னின்று செயற்பட்டு வருகின்றது.

TNL Onstage ஆனது TNL வானொலி வ​லையமைப்பினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற ஒரு வருடாந்த இசைத் திறமை தேடல் போட்டி நிகழ்வாகும். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகின்ற இந்த நிகழ்விற்கு தெரிவு​செய்யப்படுகின்ற இசை வாத்தியக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அனைத்து வடிவ இசைகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், அவர்கள் போட்டியில் தமது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கு உதவும் வகையில் அனுபவம் வாய்ந்த இசைக் கலைஞர்களின் கீழ் செயலமர்வுகள் மற்றும் பயிற்சி அமர்வுகளிலும் பங்குபற்றும் வாய்ப்பையும் பெற்றுக்கொள்கின்றனர்.

HUTCHநிறுவனத்தின் பிரதம தலைமை அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் குறிப்பிட்டுகையில், “இலங்கையில் புதிய இ​சைத்திறமையை இனங்கண்டு அவற்றை ஊக்குவிக்கும் முகமாக TNLவானொலிக்கு ஆதரவளிப்பதில் Hutchமிகுந்த மகிழ்ச்சி அடைகின்றது. இலங்கையிலுள்ள இளைஞர், யுவதிகள் தமது சுய அபிவிருத்திக்கு இன்நெட் வசதியைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கும் வ​கையில் புரோட்பான்ட் தரவு (data)உற்பத்திகளை, நியாயமான கட்டணத்தில் விசாலமான வலையமைப்பின் கீழ் கிடைக்கச்செய்யவேண்டும் என்ற Hutch இன் இலக்குடன் இந்த முயற்சி ஒத்திசைவதாக அமைந்துள்ளது” என்று கூறினார்.

இந்த பங்குடமை தொடர்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட TNL Radio Networks (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்புத்தல் முகாமையாளரான யூட் பெனடிக் அவார்கள், “இலங்கையில் அடுத்த மிகத் திறமையான இசைக் கலைஞரை வெளிக்கொண்டுவரும் எமது தேடல் பயணத்தில், இந்த ஆண்டு TNL Onstage விசேட நிகழ்விற்கு நிகழ்விற்கு எம்முடன் கைகோர்த்துள்ள Hutch Sri Lanka நிறுவனத்தின் உற்சாகமான ஈடுபாடு தொடர்பில் நாம் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.

 

1.இடமிருந்து:HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருகுமார் நடராசா அவர்கள், TNL Radio Networks (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளரான யூட் பெனடிக் அவர்களுடன் உடன்படிக்கையை பரிமாறுகின்றார்.TNL රේඩියෝ නෙට්වර්ක් පෞද්ගලික සමාගමේ විකුණුම් සහ අලෙවිකරණ කළමනාකරු ජූඩ් ඛෙනෙඩික්ට් මහතා සමඟ ගිවිසුම හුවමාරු කර ගත් අවස්ථාව.

இடமிருந்து:HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருகுமார் நடராசா அவர்கள், TNL Radio Networks (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளரான யூட் பெனடிக் அவர்களுடன் உடன்படிக்கையை பரிமாறுகின்றார்.

இடமருந்து: ஷேஹான் மன்னன் – உதவி முகாமையாளர், சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள், டிலானி டி சில்வா– தலைமை அதிகாரி, சந்தைப்படுத்தல் தொடர்பாடல் , றம்ஹீனா மொர்செத் லீ – தலைமை அதிகாரி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், திருக்குமார் நடராசா – பிரதம நிறைவேற்று அதிகாரி, Hutch,  யூட் பொனடிக்- முகாமையாளர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், லந்த பெரேரா –சந்தைப்படுத்தல் அதிகாரி, TNL Radio Networks (Pvt) Ltd

இடமருந்து: ஷேஹான் மன்னன் – உதவி முகாமையாளர், சந்தைப்படுத்தல் தொடர்பாடல்கள், டிலானி டி சில்வா– தலைமை அதிகாரி, சந்தைப்படுத்தல் தொடர்பாடல் , றம்ஹீனா மொர்செத் லீ – தலைமை அதிகாரி, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், திருக்குமார் நடராசா – பிரதம நிறைவேற்று அதிகாரி, Hutch, யூட் பொனடிக்- முகாமையாளர், விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல், லந்த பெரேரா –சந்தைப்படுத்தல் அதிகாரி, TNL Radio Networks (Pvt) Ltd