கையடக்கத் தொடர்பாடல் சேவைகளுக்கான இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் தெரிவான HUTCH, மற்றுமொரு வாடிக்கையாளர் சார்ந்த முதன் முதலான முயற்சியாக, இலங்கையில் உள்ள கையடக்கத் தொலைபேசி சந்தாதாரர்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையிலான ‘Hari Katha’ எனும் அழைப்பு பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த பெக்கேஜ், வழக்கமான ஒரே வலையமைப்பில் அழைப்பதற்கு மாத்திரமான பெக்கேஜை தாண்டி, எந்தவொரு வலையமைப்பிற்கும் (ANY NETWORK) அழைக்க 1,000 நிமிடங்களை வழங்குகிறது. தற்போது வேறு வலையமைப்பிலுள்ள தங்களது நண்பர்கள், குடும்பத்தினர், வணிக கூட்டாளர்களை அழைப்பதற்கு கையடக்கத் தொலைபேசி வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் அறவிடப்படுகிறது.

கட்டுப்படியாகும் விலையில் அமைந்த பெக்கேஜ்கள், டேட்டா மற்றும் குரல் அழைப்பு தேவைகளுக்கான உயர்தர வலையமைப்பு அனுபவத்தை வழங்கும் கையடக்கத் தொலைபேசி சேவை வழங்குநரான HUTCH, தனது வாடிக்கையாளர்களின் கஷ்டமான நிலைமைகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்து வருகிறது.

Hutch இன் இந்த புரட்சிகரமான Any Network அழைப்பு பொதியானது, மாதத்திற்கு ரூ. 345 எனும் மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைக்கிறது. இதில், எந்தவொரு வலையமைப்பில் உள்ளவர்களையும் அழைக்க 1,000 நிமிடங்கள் வழங்கப்படுவதோடு, Hutch வலையமைப்பிற்குள் அழைக்க 500 போனஸ் நிமிடங்கள் வழங்கப்படுகின்றது. அது மாத்திரமன்றி 2GB Anytime Data, எந்தவொரு வலையமைப்பிற்கும் 1,000 SMS போன்ற மேலதிக சலுகைகளையும் இது கொண்டுள்ளது.

தற்போது மக்கள் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் இவ்வேளையில் இப்பொதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக, செலவு குறைந்த தீர்வுகளை வழங்குவதை எப்போதும் Hutch தனது இலக்காக கொண்டுள்ளது. Hutch இன் இந்த புதிய பெக்கேஜின் மூலம், ஒரு கையடக்கத்தொலைபேசி பயனர் தனது முழுமையான கையடக்கத் தொலைபேசி அழைப்புத் தேவைகளையும் வெறும் 345 ரூபாவில் சிறப்பாக நிர்வகிக்க முடியும்.

Hutch வாடிக்கையாளர்கள், *145# ஐ டயல் செய்வதன் மூலம் அல்லது HUTCH App மூலம் இந்த தனித்துவமான பெக்கேஜை செயற்படுத்தலாம். அத்துடன், நாடு முழுவதுமுள்ள 8,000 இற்கும் அதிகமான சில்லறை விற்பனை நிலையங்களில் புதிய Hutch இணைப்புகளைப் பெறலாம் என்பதுடன், ஒன்லைன் ஊடாக கோரிக்கை செய்வதன் ஊடாக தங்களது வீட்டு வாசலிலேயே புதிய இணைப்பை பெற்றுக் கொள்ளவும் முடியும்