நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்கும் பாவனையாளர் தெரிவான Hutch, அதன் மெகா ரீசார்ஜ் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்புத் திட்டமான “Hutch HARIcane” இன் முதலாவது மற்றும் இரண்டாவது வார அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி வைத்துள்ளது.

இத்திட்டத்தின் மாபெரும் பரிசாக Mahindra SUV கார் வழங்கப்படுவதுடன், வாராந்த பரிசுகளாக Honda மின்பிறப்பாக்கிகள், Rhoda ஸ்மார்ட் மின்சார மோட்டார் சைக்கிள்கள், Samsung ஸ்மார்ட்போன்கள், Samsung ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள், Airpods மற்றும் மின்கலத்தைக் கொண்ட WI-FI Router உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவை அனைத்தும் 2 மாத காலப்பகுதியில் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

 

HUTCH HARICane இன் 1ஆவ வார அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள்:

Honda மின்பிறப்பாக்கி – கிரிந்திவெலவைச் சேர்ந்த H.D.R.N குமார

Rhoda Smart Electric Bike – அம்பாறையைச் சேர்ந்த கமகே

Samsung Smartphone – ருவன்வெல்லவைச் சேர்ந்த N.R.U.R.B. விஜேதுங்க

Samsung Smart Watch – பலல்லவைச் சேர்ந்த B.R. கம்லத்

மின்கலம் கொண்ட WI-FI Router – பூண்டுலோயாவைச் சேர்ந்த சி. சுபகாந்த்

Sonic Gear Airpod – நத்தரம்பொத்தவைச் சேர்ந்த M.D. ரத்நாயக்க

 

2ஆவது வார அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள்:

Honda மின்பிறப்பாக்கி – புல்தலவைச் சேர்ந்த திருமதி H.M.D.N. விமலசேன

Rhoda Smart Electric Bike – தலாத்துஓயாவைச் சேர்ந்த R.K.M.H. செனவிரத்ன

Samsung Smartphone – மொரட்டுவையைச் சேர்ந்த W.S.R.C.S. ஜயசிங்க

Samsung Smart Watch – பதுளையைச் சேர்ந்த S.M. ஆரியதாச

மின்கலம் கொண்ட WI-FI Router – முத்துவெல்லவைச் சேர்ந்த R.H.T.R.C. பெனாண்டோ

Sonic Gear Airpod – P.A.D.A.C. மஹரகமவைச் சேர்ந்த விஜயரத்ன

HUTCH HARICane சந்தைப்படுத்தல் ஊக்குவிப்புத் திட்டமானது, தற்போதைய சவாலான காலகட்டத்தில் மிகவும் பொருத்தமான பல பரிசுகளை வெல்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவதன் மூலம், வாடிக்கையாளர்கள் தங்களது வாழ்க்கையை எளிதாக்கும் வகையில், அனைத்து Hutch வாடிக்கையாளர்களுக்குமான கட்டணமற்ற இலவச திட்டமாகும். இங்கு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யும் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரீசார்ஜ்களுக்கும் பரிசுகளை வெல்வதற்கான இலவச வாய்ப்பைப் பெறுகிறார்கள். இதில் அவர்கள் எவ்வளவு அதிகமாக ரீசார்ஜ் செய்கிறார்களோ, அவ்வளவு அதிகமாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள்.

அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு, HUTCH குழுவினர் தங்கள் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இந்த சவாலான காலத்தில் இதுபோன்ற பெறுமதியான பரிசுகளை வழங்கி இதுபோன்ற திட்டத்தை நடாத்தி வருகின்றமை தொடர்பில் வெற்றியாளர்கள் தங்கள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.