அத்தியாவசியமான தகவல்

“மொபைல் தொலைபேசியை வைத்திருக்கும் அனைவருக்கும் இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு வழங்கும் அத்தியாவசியமான தகவல்.”

நீங்கள் அறிந்துள்ளீர்களா?

உங்களது பெயரின் கீழ் பெறப்பட்ட சிம் அட்டையொன்றை வேறு எவராவது உபயோகிக்கின்றனரா?
உசாராக இருங்கள்!!!
உங்களது பெயரின் கீழ் பெறப்பட்ட மொபைல் தொலைபேசி சிம் அட்டை ஒன்றின் மூலமாக மேற்கொள்ளப்படுகின்ற அழைப்புக்கள் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பு.
இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட வலையமைப்பு இணைப்பு அல்லது திட்டத்தை கொள்வனவு செய்யுங்கள் (அங்கீகார இலக்கம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது).
சிம் அட்டை உங்களுடைய பெயரின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு உங்களுடைய சாதனத்திலிருந்து #132# என டைப் செய்து SEND பட்டனை கிளிக் செய்யவும்.

உங்களது மொபைல் தொலைபேசியை நீங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றீர்களா?

உங்களுடைய மொபைல் தொலைபேசியை உபயோகிப்பது தொடர்பான பிரதான நோக்கத்தை தெளிவாக விளங்கிக்கொண்டு, அதனை துஷ்பிரயோகமான முறையில் உபயோகிப்பதை எப்போதும் தவிர்த்துக் கொள்ளுங்கள். மற்றையவர்களுக்கு இடையூறு அல்லது தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளை தவிர்த்துக்கொள்வதை உறுதி செய்ய இது உதவும். அத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும் (தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று சட்டம்)

தகாத அல்லது அச்சுறுத்தல் விடும் செய்திகள் (SMS) உங்களுக்கு கிடைக்கப் பெறுகின்றதா?

பதற்றப்படாது, பொறுப்புணர்வுடன் நிதானமாக செயற்படவும். அத்தகைய சந்தர்ப்பங்களில், நேரடியாக பதில் நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்துக் கொள்ளவும். உங்களது பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்து, உரிய தகவல் விபரங்களை உங்களது தொலைபேசி வலையமைப்பு நிறுவனத்திற்கு அறியத்தரவும்.

நீங்கள் பெற்றுக்கொள்கின்ற தொலைபேசி தொடர்பு இலக்கம் உங்களுக்கு உரித்தானது அல்ல

  • விநியோகிக்கப்படுகின்ற மொபைல் தொடர்பு இலக்கங்கள், தேசிய சொத்துடமையாக வரையறை செய்யப்பட்டுள்ளன.
  • நீங்கள் உங்களது தொலைபேசி இணைப்பிற்கான பட்டியல் கட்டணங்களை செலுத்த தவறும் பட்சத்தில் உங்களது இணைப்பு துண்டிக்கப்பட்டால் அல்லது உங்களது தொடர்பு இலக்கம் நீண்ட காலத்திற்கு உபயோகத்தில் இல்லாத பட்சத்தில், உங்களுக்கு வழங்கப்பட்ட தொடர்பு இலக்கத்தை வேறு ஒரு வாடிக்கையாளருக்கு மாற்றும் நடவடிக்கையை உங்களது தொலைபேசி வலையமைப்பு நிறுவனம் மேற்கொள்ளலாம்.

பாரிய தொகைப் பணப் பரிசு கிடைத்துள்ளதாக அறிவிக்கும் செய்தி (எஸ்எம்எஸ்) கிடைக்கப்பெறுதல்

  • இது தொடர்பில் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.
  • உங்களது தொலைபேசி சேவை வலையமைப்பைத் தொடர்பு கொண்டு அதனை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

பணப்பரிசுகள் தொடர்பில் போலியான அணுகுமுறைகளை நீங்கள் தவிர்த்துக் கொள்ளுங்கள். மூன்றாம் தரப்பினரின் கணக்கில் பண வைப்புச் செய்வதற்கு நீங்கள் உடன்படுவது உங்களை ஏமாறச்செய்யும் ஒரு முயற்சியாக அமையக்கூடும்.

உங்கள் மொபைல் சேவை தொடர்பான சிக்கலான நிலைமைகள்

பட்டியல் கட்டண கொடுப்பனவு தொடர்பான குழப்பங்கள், புதிய இணைப்பு தொடர்பான விசாரணைகள் அல்லது உங்களுடைய மொபைல் தொலைபேசிக்கு தேவையற்ற அல்லது தொடர்பில்லாத தொடர்புகள் அல்லது அழைப்புக்கள் மாற்றம் செய்யப்படும் நிலைமைகளில் உங்களது தொலைதொடர்பு சேவை வலையமைப்பைத் தொடர்பு கொள்ளவும். அதன் மூலமாக அத்தகைய பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டு, அவற்றை உரிய முறையில் நீக்க முடியும்.

உங்களது தொலைதொடர்பு சேவை வலையமைப்பிடமிருந்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், தயவு செய்து எமக்கு அறிவிக்கவும்.

<strongபிரதிப் பணிப்பாளர் (தொழிற்பாடுகள்)
வாடிக்கையாளர் முறைப்பாடுகள்/வெகுசன தொடர்புகள்
இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு
276, எல்விட்டிகல மாவத்தை,
கொழும்பு 08.

உடனடி வேண்டுகோளுக்கு: 1900

011-2662222
011-2662215
011-2662216

மொபைல் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்யும் வேளையில் கவனத்தில் கொள்ளவேண்டியது,

குறிப்பிட்ட மொபைல் தொலைபேசி ஒன்றை நீங்கள் கொள்வனவு செய்ய விரும்பும் பட்சத்தில் அந்த உற்பத்தி, ஒரு அசல் உற்பத்தியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டினால், அந்த தொலைபேசியில் உள்ள IMEI குறியீட்டு இலக்கத்தை எந்தவொரு தொலைபேசி மூலமாகவும் கீழே காட்டப்பட்டவாறு டைப் செய்து 1909 இற்கு செய்தியை அனுப்பி வைக்கவும்.

IMEI (இடைவெளி) 15 இலக்க IMEI குறியீட்டு எண்

இலங்கை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் வியாபார அனுமதியைப் பெற்றுக்கொள்ளாது மொபைல் அல்லது ஏனைய சாதனங்களை உற்பத்தி செய்வதோ, இறக்குமதி செய்வதோ, விற்பனை செய்வதோ, விற்பனை நிலையத் தொழிற்பாடுகளை முன்னெடுப்பதோ, அல்லது அவை தொடர்புபட்ட வியாபார நிறுவனங்களை குத்தகையில் எடுப்பதோ அல்லது அத்தகைய நிறுவனங்களைப் பேணுவதோ சட்ட விரோதமாகும்.

இலங்கை தொலைதொடா;பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் வியாபார அனுமதியைப் பெற்றுள்ளதை உறுதிப்படுத்தும் சான்றிதழைக் காட்சிப்படுத்தியூள்ள விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சியறைகளில் மட்டுமே மொபைல் சாதனங்களைக் கொள்வனவூ செய்யூங்கள்.

“உங்களுடைய மொபைல் தொலைபேசி சாதனம் காணாமல் போவதற்கு அல்லது இழக்கப்படுவதற்கு முன்னர்.....”

உங்களுடைய மொபைல் சாதனத்தின் IMEI குறியீட்டு இலக்கத்தை குறித்துக்கொள்ளவும். *#06# இனை டைப் செய்வதன் மூலமாக அதனைக் கண்டறிய முடியும்.

உங்களுடைய மொபைல் தொலைபேசி காணாமல் போய் விட்டதா அல்லது இழந்து விட்டீர்களா?

  • உங்களுடைய வலையமைப்பு சேவை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு உங்களது மொபைல் இணைப்பை உடனடியாக துண்டிக்கவும்.
  • அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவுசெய்து, அந்த முறைப்பாட்டின் பிரதி ஒன்றுடன், உங்களுடைய தேசிய அடையாள அட்டையின் பிரதி ஒன்றையும் இணைத்து, இழந்து போன திகதி, தொடர்பு இலக்கத்தின் விபரங்கள் மற்றும் IMEI குறியீட்டு இலக்கம் ஆகியவற்றுடன் உரிய கோரிக்கைப் படிவத்தை கையளிக்கவும்.

வாடிக்கையாளர் சேவை ஒப்பந்தம்

SMS அனுப்பியது தோல்வி?

உங்கள் செய்தி அமைப்புகளைச் சரிபார்த்து, உங்கள் செய்தி மைய எண் சரியானதா என்பதை உறுதிப்படுத்தவும்.

உரை செய்திகளை அனுப்பும் வகையில் எஸ்எம்எஸ் சேவை மைய எண் உங்கள் தொலைபேசியில் சரியாக அமைக்கப்பட வேண்டும். நீங்கள் தற்செயலாக உங்கள் மொபைல் போனில் மாற்றினால் அல்லது நீக்கிவிட்டால், நீங்கள் இனிமேல் SMS அனுப்ப முடியாது. நீங்கள் தொலைபேசியில் உரை செய்திகளை அனுப்ப முயற்சிக்கும் போது நீங்கள் “செய்தியை அனுப்பும்” தோல்வி அடைந்திருப்பீர்கள்.

உங்கள் செய்தி மைய எண் திருத்தப்பட்டு அல்லது நீக்கப்பட்டிருந்தால், பின்வரும் எண்ணை உங்கள் செய்தி மைய எண் +94785000005 என உள்ளிடவும்

உங்கள் ஃபோனில் செய்தி மைய எண்ணை எவ்வாறு கட்டமைக்கலாம்

ஆன்ட்ராய்டுகளில், செய்திகள்> விருப்பம் / செட்டிங்ஸ்> செய்தி செட்டிங்ஸ் செல்லவும்.
ஐபோன், நீங்கள் * # 5005 * 7672 # ஐ டயல் செய்வதன் மூலம் உங்கள் செய்தி மைய எண்ணைச் சரிபார்க்கலாம்.
உங்கள் ஐபோன் டயலில் சேவை மைய எண்ணை மாற்ற ** 5005 * 7672 * + 94785000005 #.