One Galle Face இல் புதிய Premier Center இனைத் திறந்த Hutch

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, தனது புதிய Premier Center இனை கொழும்பின் மிகவும் மதிப்புமிக்க விற்பனை முகவரிகளில் ஒன்றான One Galle Face Mall  இல் ஆரம்பித்துள்ளது. Hutch Premier Center, முக்கிய அடையாளமாக மாறியுள்ள சமுத்திரத்தை நோக்கியவாறு அமைந்துள்ள இந்த விற்பனை மையத்தின் 4 ஆவது மாடியில் அமைக்கப்பட்டுள்ளது.

Hutch Premier Center, 2020 டிசம்பர் 29 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டதுடன், இதன் பிரதம விருந்தினராக திருமதி. யோகலதாகினி திருக்குமார், Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. திருக்குமார் நடராசா மற்றும் Hutch நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினரும் கலந்து கொண்டனர். ஒரு முழுமையான வாடிக்கையாளர் சேவை மையமான Hutch Premier Center, ஒரே கூரையின் கீழ் Hutch இன் பல தரப்பட்ட சேவைகளையும் வழங்கவுள்ளது.

இந்த நிலையமானது One Galle Faceஇன் பல வகையான அனுபவங்களுக்கான பெறுமதியான சேர்வையாகும். Hutch வாடிக்கையாளர்கள் One Galle Face இற்கு வரும் போது இந்த One Galle Faceஇற்கு வருகை தருவதன் மூலம் நட்பான தொந்தரவு இல்லாத சேவையை பெற்றுக்கொள்ள முடியும்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன், தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது. இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better” சேவை வழங்க உதவியது.

#BondWithHutch TikTok கொவிட் பாதுகாப்பு சவால் 7 நாட்களில் 3 மில்லியன் பார்வைகளை ஈட்டியது

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரேட்பேண்ட் வழங்குனராகத் திகழும் HUTCH, இளைஞர்களை முக்கியமான தொற்றுநோய் பாதுகாப்பு நடைமுறைகளில் ஈடுபடுத்தும் பொருட்டு TikTok தளத்தை வெற்றிகரமாக பயன்படுத்தியுள்ளது.

நாட்டில் கொவிட் 19 இன் பரவலைத் தடுக்கும் நோக்கத்துடன் கூடிய இந்த புதுமையான பிரசாரத்தை முதன் முறையாக முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு TikTok இல் உள்ள புதுமையான “சவால்” (Challenge) அம்சத்தை  #BondWithHutch என்ற டெக்குடன் Hutch பயன்படுத்தியது. இதில் துடிப்பான செல்வாக்கு செலுத்துபவர்களின் (influencers) பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த பிரசாரம், COVID19 பரவுவதைத் தடுக்க சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் நினைவூட்டுவதாக அமைந்திருந்தது.

Hutch TikTok சவால் விரைவாக வைரலாகியதுடன், இதன் விளைவாக பல TikTok பாவனையாளர்கள் தங்கள் TikTok வீடியோக்களில் #BondWithHutch பாடலை உருவகப்படுத்தத் தொடங்கினர். #BondWithHutch சவால் 1 மில்லியன் பார்வைகளை எட்ட இரண்டு நாட்கள் மட்டுமே தேவைப்பட்டதென்பதுடன், அந்த மைல்கல்லை எட்டிய இலங்கையின் வேகமான வர்த்தகநாம பிரசாரமாக அது மாறியது. உண்மையில், இப்போது ஒரு வாரத்தில் 3 மில்லியனுக்கும் அதிக பார்வையை பெற்று சாதனை படைத்துள்ளதுடன், பிரசாரம் 500+ க்கும் மேற்பட்ட பாவனையாளர்கள் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பெற்றுள்ளது.

#BondWithHutch பாடல் இந்த TikTok சவாலுக்காக விசேடமாக உருவாக்கப்பட்டதுடன், இது சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் மூலம் (முகமூடிகளை அணிவது, கைகளை கழுவுதல் மற்றும் 1 மீட்டர் தூரத்தை பேணுவது போன்றவை) பொறுப்பான குடிமகனாக ஒருவரின் பங்கை ஆற்றுவது தொடர்பான அர்த்தமுள்ள செய்தியைக் கொண்டுள்ளது.

#BondWithHutch சவால் குறித்து, HUTCH இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, ரம்ஸீனா மொர்செத் லாய் கருத்து தெரிவிக்கையில், “இந்த சிறப்பு பிரசாரத்தின் மூலம், குறிப்பாக இளைஞர்களை எவ்வாறு அவர்களின் சொந்த பாதுகாப்பிற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வது மற்றும் செயற்படுவது என்பதில் Hutch ஒரு வித்தியாசத்தை உருவாக்க விரும்பியது. கொவிட் பாதுகாப்பு செய்தியை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்வதில் நாங்கள் வெற்றியடைந்தது மட்டுமல்லாமல், வீட்டில் சிக்கித் தவிக்கும் நபர்களுக்கு புன்னகையையும் கொண்டு வர முடிந்தது என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

Hutch நிறுவனத்தின் புதிய வர்த்தகநாம தூதுவர் காயத்ரி ஷான் மற்றும் பிரபல கலைஞர்கள் / நடிகைகளான ஷனுத்ரி பிரியசாத், தினாக்ஷி பிரியசாத், ஓஷதி ஹிமாஷா, தனாஷா ஹதரசிங்க, தில்கி உரேஷா, ஊடக பிரபலங்களான சச்னி நிபுன்சலா, தனு இன்னிசைத்தம்பி மற்றும் சமூக ஊடக நட்சத்திரங்களான ரமோத் மாலக்க, ஆதில் ஒஸ்மான், தேதுனு ஆகர்ஷனி, ஷைனி நெதிகுமாரா மற்றும் காவ்யா எரியாகம போன்றோரின் அற்புதமான ஆதரவுடன் #BondWithHutch சவால் மேலும் தீவிரமடைந்தது.

அவர்கள் தங்களது சொந்த தனித்துவமான TikTok வீடியோக்களுடன் விவரமான பாதுகாப்பு செய்திகளை உள்ளடக்கி #BondWithHutch சவாலை இலவசமாக விரிவுபடுத்தினர். இதன் பங்கேற்பாளர்கள் நினைவில் நிற்கக்கூடிய ராகத்துடன் கூடிய எளிதில் மறக்க முடியாத இந்த புதுமையான சவாலை மிகவும் பாராட்டினர். நாடு தழுவிய கொவிட் விழிப்புணர்வு பிரசாரத்திற்காக இளைஞர்கள் தங்கள் படைப்பு திறமைகளை எளிதில் வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது.இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better”  சேவை வழங்க உதவியது.

Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருது வென்ற ஒரேயொரு தொலைத்தொடர்பாடல் நிறுவனமான  HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனராகத் திகழும் HUTCH, அண்மையில் நிறைவடைந்த Sri Lanka Brand Leadership Awards 2020 நிகழ்வில் விருதுகளைப் பெற்ற ஒரே தொலைத்தொடர்பாடல் வர்த்தகநாமம் என்ற அரிய அங்கீகாரத்தைப் பெற்றது.

ஏனைய பல முன்னணி வர்த்தகநாமங்களும் விருதுகளை வென்ற இந்த நிகழ்வில், ஒரு விருதல்ல, இரு விருதுகளை HUTCH தனதாக்கியது. ‘வருடத்துக்கான சிறந்த சந்தைப்படுத்தல் பிரசாரம்’ (Best Marketing Campaign of the Year) மற்றும் வருடத்தின் வளர்ந்து வரும் வர்த்தகநாமம் (Emerging Brand of the Year) ஆகிய இரட்டை விருதுகளை Hutch இந்த நிகழ்வில் வென்றது.

HUTCH நிறுவனத்தின் “Be Any-where” – 4G வலையமைப்பு பிரசாரத்திற்கான அங்கீகாரமாக ‘வருடத்திற்கான சிறந்த சந்தைப்படுத்தல் பிரசாரம்’ என்ற விருதும், 2020 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வர்த்தகநாமத்தின் செயல்திறனுக்கான அங்கீகாரமாக ‘வருடத்தின் வளர்ந்து வரும் வர்த்தகநாமம்’ என்ற விருதும் வழங்கப்பட்டிருந்தன.

HUTCH இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, ரம்ஸீனா மொர்செத் லாய், இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், “உலகின் மிகவும் விரும்பப்படும் விருது நிகழ்வொன்றிலிருந்து இரண்டு பாரிய விருதுகளைப் பெற்றதில் நாங்கள் உண்மையிலேயே கௌரவமடைவதுடன், பெருமைப்படுகின்றோம். எங்கள் முழு அணியின் அர்ப்பணிப்பும் இந்த விருதுகளை எங்களுக்கு பெற்றுத் தந்துள்ளன. இந்த விருதுகள் முன்னோக்கிச் செல்லவும், கட்டுப்படியாகும் மற்றும் தனித்துவமான மொபைல் தீர்வுகளுடன் தேசத்துக்கு சேவை செய்யவும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன,” என்றார்.

“Sri Lanka Brand Leadership” என்பது சந்தைப்படுத்தல் துறையினரின் சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் முதற்தர தளமான CMO Asiaவினால் ஏற்பாடு செய்யப்படும் வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வாகும். இந்த ஆண்டு மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற Sri Lanka Brand Leadership Awards 2020  சிறந்த நிறுவனங்கள், வர்த்தகநாமங்கள் மற்றும் தனிநபர்களை அவர்களின் பிராண்டிங், நுகர்வோர் ஈடுபாடு மற்றும் நல்ல விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பங்களிப்புகள் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்புக்காக அங்கீகரித்தது,” என மேலும் குறிப்பிட்டார்.

CMO Asiaவின் நிறைவேற்று பணிப்பாளர், Dr. ஆலொக் பண்டிட் கருத்து தெரிவிக்கையில்: “இலங்கையின் சிறந்த நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்களில் சிறந்ததை கௌரவிக்கும் மற்றொரு வெற்றிகரமான Leadership Awards நிகழ்வினை நாங்கள் நடாத்தி முடித்துள்ளோம். இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்களில், இந்த ஆண்டு விருதுகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒரேயொரு தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குநராக HUTCH உருவெடுத்துள்ளதுடன், இது இந்த தொலைத்தொடர்பு வர்த்தகநாமத்துக்கான மிகவும் பெருமையான தருணமாக இருக்க வேண்டும். விருது வென்ற அனைவருக்கும் அவர்களின் பாரிய வெற்றிக்கும், சந்தைப்படுத்தல் துறையினரின் பங்களிப்புக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்,” என்றார்.

இந்த விருதுகள் தொடர்பில் பாராட்டு மழை பொழிந்த,  HUTCH  இணைந்து பணியாற்றும் கிரியேட்டிவ் ஏஜென்சியான Wunderman Thompson இன் பிரதான நிறைவேற்று அதிகாரி அலைனா ஹஜி ஒமர், கருத்து தெரிவிக்கையில், “இந்த அற்புதமான பங்குடமை குறித்து நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்! இந்த விருதுகளுடன் நாம் கொண்டாடும் வெற்றியானது வளர்ச்சி, புத்தாக்கம், துணிச்சலான ஆக்கபூர்வம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றின் உற்சாகமான மற்றும் லட்சியபூர்வமான கலாசாரத்தின் விளைவென்பதுடன், இது HUTCH இல் மிகவும் பிரகாசமாக மிளிர்கின்றது,” என்றார்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது.இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better”  சேவை வழங்க உதவியது.  HUTCH தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களின் வலையமைப்பு தேவைகளுக்கும் தனது சேவையை வழங்கி பூர்த்தி செய்து வருகின்றது.

காயத்ரியை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்த HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் புரோட்பேண்ட் சேவை வழங்குநரான HUTCH, பிரபல சமூக ஊடக பிரபலமும், திரை நட்சத்திரமுமான காயத்திரி சண்முகநாதனை புதிய வர்த்தகநாம தூதுவராக நியமித்துள்ளது.

இந்த நியமனத்தின் மூலம் HUTCH இன் சேவைகளை பயன்படுத்த தயாராகி வரும் இலங்கை தமிழ் சமூகத்தின் ஒரு பரந்த தளத்துடன் மும்முரமாக இணைந்து செயற்பட அந் நிறுவனம் தயாராகி வருகின்றது.

தமிழ் பேசும் சமூகத்தினரிடையே நன்கு அறியப்படும், பிரபல நட்சத்திரமான காயத்திரி TikTok இல் 2.5 மில்லியன் பின்தொடர்பவர்களையும், Instagram இல் 270,000 பின்தொடர்பவர்களையும் கொண்டுள்ளதுடன், சமூக ரீதியாக செல்வாக்குச் செலுத்தும் உரையாடல்களை ஊக்குவிக்கிறார்.

அவர் ஒரு தென்னிந்திய திரைப்படத்தில் நடித்தமையானது அவரை சினிமா நட்சத்திரமாக உயர்த்தியது. HUTCH இன் ‘Bigger and Better’ தகவலை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் காயத்ரி முக்கிய பங்கு வகிப்பார்.

4G ஐ முடியுமானவரை கூடுதலான மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட அதன் முயற்சியில், வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் தனது 4G வலையமைப்பை வலுப்படுத்துவதனை பூர்த்தி செய்துள்ளதன் காரணமாக 2020 ஆம் ஆண்டானது புதிய வாய்ப்புக்களைக் கொண்டுவந்துள்ளது.

இதற்கான உடன்படிக்கையை கையெழுத்திடும் நிகழ்வில் கருத்து தெரிவித்த  HUTCH இன் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி, ரம்ஸீனா மொர்செத் லாய், “எங்கள் வர்த்தகநாம தூதராக காயத்ரி போன்ற ஒரு பிரபலமான நட்சத்திரத்தை கொண்டிருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். காயத்ரி எம்முடன் இணைந்து கொண்டமையானது எங்கள் முக்கிய தகவல்களையும், சேவை வழங்கல்களையும் பொதுமக்களுக்கு மிகவும் ஈர்ப்பான வகையில் எடுத்துச் செல்வதில் சமூக ஊடகங்களை முற்றிலுமாக பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. ஒரு சமூக பொறுப்புள்ள பெருநிறுவனம் என்ற வகையில், இலங்கை சமுதாயத்தின் ஒவ்வொரு பகுதியையும் எங்கள் வழங்கல்கள் சென்றடைகின்றன என்பதை உறுதிப்படுத்துவது நமது கடமையாகும். சமூக ஊடகங்கள் அதற்கான சிறந்த தளமென்பதுடன் எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சேவையை வழங்குவதற்காக எங்களை நிலைநிறுத்துவதில் காயத்ரி எங்களுடன் நெருக்கமாக பணியாற்றுவார்,” என்றார்.

காயத்திரி சண்முகநாதன் கருத்து தெரிவிக்கையில்,”HUTCH வர்த்தகநாம தூதுவராக  இருப்பதில் நான் பெருமைப்படுவதுடன், கௌரவமாகவும் உணர்கின்றேன். HUTCH என்பது உண்மையிலேயே வாடிக்கையாளர்களின் தேவைகளை மையமாகக் கொண்ட ஒரு வர்த்தகநாமமென்பதுடன்,இதன் அண்மைய 4G வலையமைப்பு விரிவாக்கமானது பரந்த வாடிக்கையாளர் தளத்திற்கு பயனளித்தது. அறிவு பகிர்வு அமர்வுகள் மற்றும் ஊடாடும்  பயிற்சிப் பட்டறைகள் உள்ளிட்ட திட்டமிட்ட செயற்பாடுகளில் HUTCH சந்தாதாரர்களுடன் தீவிரமாக ஈடுபட நான் எதிர்ப்பார்த்துள்ளேன்,” என்றார்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது. 2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது.இந்த விரிவாக்கமானது HUTCH, “Bigger and Better”  சேவை வழங்க உதவியது.  HUTCH தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களின் வலையமைப்பு தேவைகளுக்கும் தனது சேவையை வழங்கி பூர்த்தி செய்து வருகின்றது.

HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான HUTCH, அண்மையில் HUTCH ‘தெனுமை மில்லியனையை’ வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்திருந்ததுடன், இந்த மாபெரும் பரிசு வழங்கும் நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்றது. தெனுமை மில்லியனையை பொது அறிவு வினா விடை போட்டியானது ஆறு மாதங்கள் நடைபெற்றது.

hSenid Software International நிறுவனத்தின் துணை நிறுவனமான BeyondM, தெனுமை மில்லியனையை போட்டிக்கான தளம் மற்றும் சேவை வழங்குநர் பங்காளராக செயற்பட்டிருந்தது. BeyondM, உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகின்றது.

இதன் வெற்றியாளர்கள் ஆறு மாத காலத்தின் பின்னர்  கொழும்பில் அமைந்துள்ள HUTCH தலைமையகத்தில் இடம்பெற்ற மாபெரும் குலுக்கலின் ஊடாக தெரிவு செய்யப்பட்டனர்.வினா விடையானது போட்டியாளர்களுக்கு அவர்கள் பெற்ற புள்ளிகளின் விகிதாசாரத்துக்கு அமைய வெற்றி வாய்ப்புகளை வழங்கியது.முதல் பரிசு களனியைச் சேர்ந்த ஜே எம் டபிள்யூ ஏ தர்மரத்னவுக்கும், இரண்டாவது பரிசு தெமட்டகொடையைச் சேர்ந்த எம் எச் எம் நஜுபுதீனுக்கும், மூன்றாம் பரிசு புத்தளத்தைச் சேர்ந்த ஏ எச் ஆர் மொஹமட்டுக்கும் வழங்கப்பட்டன.

தெனுமை மில்லியனையைஅதிகளவில் வெகுமதிகளை வழங்கும் போட்டி மட்டுமல்ல, பாவனையாளர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தவும்,  ஓய்வு நேரத்தை குதூகலமாக கழிக்கும் அதேவேளை வினைத்திறனாக செலவிடவும் உதவுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் பாவனையாளர்கள் WIN என டைப் செய்து 6633 க்கு ஒரு SMS ஒன்றை அனுப்புவதன் மூலம் அல்லது play storeலிருந்து அப்ளிகேஷனை தரவிறக்குவதன் மூலமும் பதிவு செய்துகொள்ளலாம்.

ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings Limited இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமான Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, இலங்கையில் உள்ள மொபைல் வலையமைப்பு சேவை வழங்குநர்களிடையே முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக  தன்னை நிரூபித்தது.2019 ஆம் ஆண்டு Etisalat நிறுவனத்தை கையகப்படுத்தியதன் பின்னர் HUTCH மொபைல் வலையமைப்பு வேகமாக வளர்ச்சியடைந்ததுடன்,  தற்போது 078 மற்றும் 072 ஆகிய இரு சந்தாதாரர்களுக்கும் சேவை வழங்குகின்றது. HUTCH இன் புரட்சிகரமான 4G விரிவாக்கமான ஒரு திருப்பு முனையாக அமைந்ததுடன், 4G வலையமைப்பு மையமாக அதனை முன்னிலைப்படுத்தியது. HUTCH தற்போது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள மக்களின் வலையமைப்பு தேவைகளுக்கும் தனது சேவையை வழங்கி பூர்த்தி செய்து வருகின்றது.

பெயர்கள் இடமிருந்து வலமாக

செஹாரா மொராயஸ் ( Asst. Manager – Customer Service – HTLL), 3ஆம் இடம்– ஏ.எச்.ஆர்.மொஹமட், புத்தளம், இசுறு எதிரிமான்னAccount Manager (hSenid Mobile Solutions),  மரினா இமானுவல் (AGM – Customer Services – HTLL), வெற்றியாளர்– ஜ.எம்.டபிள்யூ. ஏ. தர்மரத்ன, களனி, சமன் குமார (Director Finance – hSenid Mobile Solutions), கசுன் ஜயசூரிய (Asst. Manager – VAS – HTLL), 2ஆம் இடம்– எம்.எச்.எம்.நஜுபுதீன், கொழும்பு, தனசிரி விஜேதாச (Head of VAS – hSenid Mobile Solutions)

“எமது நோக்கம் மேம்பட்ட 4G அனுபவத்தை வழங்குவதே!” – திருக்குமார் நடராசா, Hutch இன் பிரதான நிறைவேற்று அதிகாரி

நாடு பூராகவும் தனது பாரிய, மேம்பட்ட 4G வலையமைப்பை இவ்வருடம் பெப்ரவரியில் பூர்த்தி செய்த HUTCH, தனது வர்த்தகநாமத்தின் பிரசன்னத்தை மேம்படுத்தி வருவதுடன், அதன் பாரிய 2G,3G மற்றும் 4G வலையமைப்புடன் இலங்கையின் முதற்தர தொலைத்தொடர்பு நிறுவனமாக தன்னை மேலும் ஸ்தாபிக்கும் நடவடிக்கையிலும் மற்றும் அனைத்து தரப்பு நுகர்வோரதும் குறுக்கு வெட்டு பிரிவினர் விரும்பும் வகையிலான பல தரப்பட்ட புத்துருவாக்க தயாரிப்புகளை வழங்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளது.

கடந்த ஆண்டு Etisalat கூட்டிணைக்கப்பட்டமையின் விளைவாக குறிப்பிடத்தக்க எழுச்சி காணப்படுவதுடன், ஹொங்கொங்கை தளமாகக் கொண்ட CK Hutchison Holdings இன் இந்த உள்நாட்டு துணை நிறுவனமானது, நம்பிக்கையுடனும் இந்த தீவு தேசம் தொடர்பில் அர்ப்பணிப்புடனும் உள்ளது.

“HUTCH” என்ற வர்த்தகநாமத்தின் கீழ் இயங்கும் Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd, வாடிக்கையாளர்கள் நாளாந்தம் முகங்கொடுக்கும் உண்மையான பிரச்சினைகளுக்கு, உண்மையான தீர்வை வழங்குவதன் மூலம் எதிர்ப்பார்ப்பை விட மேலதிகமான சேவைகளை வழங்கி தொலைத்தொடர்பாடல் துறையில் புரட்சிகளை ஏற்படுத்தி வருகின்றது.

இத்தகைய பின்னணியில், நிறுவனத்தின் நாடு முழுவதுமான வலையமைப்பு விரிவாக்கம் மற்றும் அவை அதன் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த மொபைல் அனுபவத்தை வழங்க எவ்வாறு உதவுகின்றன போன்றவற்றை விபரிக்கும் HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடரசாவுடன் இடம்பெற்ற நேர்காணலின் பகுதிகள் பின்வருமாறு;

கே: எட்டிசலாட் கூட்டிணைப்பு மற்றும் புதிய முதலீடுகளின் பின்னர் HUTCH வலையமைப்பின் கவரேஜ் எவ்வாறு விரிவடைந்துள்ளது?

ப: இந்த கூட்டிணைப்பு வாய்ப்பானது கவரேஜ் மற்றும் திறன் ஆகிய இரண்டின் அடிப்படையிலும், ஒரு பாரிய வலையமைப்பின் உட்கட்டமைப்புக்கு ஒரே இரவில் Hutchசுக்கு அணுகலை வழங்கியது. இது எங்களால் முன்னர் எட்டமுடியாத முழுமையான ஆற்றலுடன் கூடிய வாடிக்கையாளர் தளத்தை அடைய எங்களுக்கு வாய்ப்பளித்ததுடன், அவர்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்காக வேலை செய்யும் ஒரு வர்த்தகநாமத்தைத் தேடும், தரவு அதிகமாகத் தேவைப்படும் மக்களுக்கு சேவை செய்ய எங்களுக்கு அனுமதி வழங்கியது.

எங்கள் அதி ஆற்றல் மிக்க, அர்ப்பணிப்பான பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஊழியர்கள் 2G மற்றும் 3G வலையமைப்புகள் இரண்டையும் ஒன்றிணைக்க மட்டுமல்லாமல், மேம்பட்ட 4G வலையமைப்பையும் இதனோடு இணைக்க முழு நேரமும் பணியாற்றினர். மேலும் இந்த மாபெரும் காரியத்தை 12 மாதங்களுக்குள் முடிக்க எம்மால் முடிந்தது. இந்த கூட்டிணைப்பானது 90%+ மக்களை உடனடியாக உள்ளடக்கிய நாடு முழுவதும் உள்ள 2000+ தொலைத்தொடர்பு கோபுரங்களில் புதிய 4G வலையமைப்பை விரிவுபடுத்திக்கொள்ள Etisalatட்டின்  வளங்களை ஒருங்கிணைக்க எங்களுக்கு உதவியது.

2014 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் 4G பாவனைக்கு வந்தாலும், அது பெருமளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பதுடன் வெறும் 40% மொபைல் சந்தாதாரர்கள் மட்டுமே இதனை உபயோகிக்கின்றனர். இந்த மெதுவான உயர்வுக்கு 4 ஜி கைபேசிகள் விலை உயர்ந்தவையாக இருந்தமை மற்றும் 4 ஜி சேவைகளைப் பயன்படுத்துவதற்கான செலவு அதிகம் என்ற எண்ணம் உள்ளிட்ட பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன. அண்மைய காலமாக கட்டுப்படியாகும் விலையில் 4G கைபேசிகள் அதிகப்படியாக வரத் தொடங்கியமையை அடுத்து, டிஜிட்டல் உள்வாங்கலை அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவது மற்றும்  கட்டுப்படியாகும் 4G புரோட்பேண்ட் அனுபவத்தை நாடு முடுவதும் வழங்குவதே எமது நோக்கமாகும்.

கே. HUTCH 4G அனுபவம் ஏன் சிறந்ததாக உள்ளது?

தாமதமாக சந்தைக்கு வருவதன் நன்மை என்னவெனில், HUTCH அண்மைய மற்றும் மிகவும் மேம்பட்ட 4 G தொழில்நுட்பத்தை நாட்டில்  செயற்படுத்த முடிகின்றமையாகும். விரிவாக்கப்பட்ட வலையமைப்புக்கு மேலதிகமாக, Hutch மிகவும் மேம்பட்ட மைய வலையமைப்பு மற்றும் கட்டணப்பட்டியல் அமைப்புகளை பயன்படுத்தியுள்ளது. இது எப்போதும் அதிகரித்து வரும் டேட்டா நுகர்வு தேவைகளுக்கு உதவுவதுடன், சேவையின் தரமும் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதே இதன் பொருளாகும். 2G மற்றும் 3G வலையமைப்புகள் உட்பட கிட்டத்தட்ட முழு Hutch மொபைல் வலையமைப்பும் கூட்டிணைப்பின் ஓர் அங்கமாக நவீனமயமாக்கப்பட்டுள்ளதுடன், HUTCH சிறந்த தரமான சேவையை வழங்க இது உதவுகிறது.

4G போன்ற தொழில்நுட்பம் நிறுவப்படுகின்றமையானது, மேலும் மேம்பாடடைவது மட்டுமன்றி, உபகரணங்களின் விலைவுகளும் மிகக் குறைவானதாகும். இதன் காரணமாக இந்த சேமிப்பினை நாம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடியுமென்பதுடன், நாம் மலிவாக இருக்க முடியும்.

தற்போது எங்கள் வலையமைப்பு ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட மிகப் பாரியது. மேலும் எங்கள் கவரேஜ் மிகவும் மேம்பட்டதென்பதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த 4G அனுபவத்தை மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 2G மற்றும் 3G அனுபவத்தையும் வழங்க அனுமதிக்கிறது.

குறிப்பாக கொவிட் முடக்கல் நிலையின் போது எதிர்பாராத தரவுப் பாவனை அதிகரிப்புடன்,  எங்கள் வலையமைப்பு விரிவாக்கம் அப்போதே நிறைவடைந்திருந்தமை எங்களுக்கு அதிர்ஷ்டமாக இருந்ததுடன்,  மேற்கூறிய அனைத்து காரணிகளையும் சேர்த்து எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிலையான மற்றும் நம்பகமான அனுபவத்தை எம்மால் வழங்க முடிந்தது.

கே: நீங்கள் Hutch இன் டேட்டா பக்கேஜ்கள் பற்றி குறிப்பிட்டீர்கள். அவற்றின் சிறப்பம்சம் மற்றும் ஏதேனும் புதிய தயாரிப்புகள் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டதா?

ப: COVID – 19 காலப்பகுதியில், வைரஸைக் கட்டுப்படுத்த கடுமையான முடக்கல் நடைமுறைகளைச் செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்தபோது, ​​எங்கள் தயாரிப்பு வரிசைகள் மற்றும் விலை மூலோபாயங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த பணியாற்றியதுடன், அவை வீட்டிலிருந்து வேலை செய்யும் மாதிரிக்கு மிகவும் உகந்ததாக அமைக்கப்பட்டது. நாங்கள் ஒரு “ஃப்ரீமியம்” சலுகையை அறிமுகப்படுத்தியதுடன், இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களில் 1.2 மில்லியனுக்கும் அதிகமானவர்கள்  தாம் நேசிப்பவர்களோடு இணைந்திருக்கும் பொருட்டு குரல், எஸ்.எம்.எஸ் மற்றும் தரவு ஆகியவற்றிற்கான இலவச தினசரி ரீலோட்களை வழங்கினோம். ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலங்களில் ரீலோட் நிலையங்களுக்கான அணுகல் தடைசெய்யப்பட்டதன் காரணமாக இது மிகவும் முக்கியமானதாக இருந்தது.

நாங்கள் ஒரு உழைக்கும் வர்த்தகநாமம். எங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாங்கள் கடுமையாக உழைக்கிறோம், அவர்களின் குறைகளை நாங்கள் கேட்கிறோம். ‘இரவு நேர டேட்டா ஒதுக்கீடுகள் வீணாகின்றமை’ குறித்து அவர்களின் வேதனையைக் கேட்டறிந்தோம். கடந்த காலங்களில், ஒவ்வொரு நாளும் காலை 9 மணி வரை இரவு நேர ஒதுக்கீட்டை நீட்டிப்பதன் மூலம் இந்த சிக்கலை தீர்க்க நாங்கள் உதவினோம், இதன் விளைவாக Hutch சந்தாதாரர்கள் தங்கள் இரவு ஒதுக்கீட்டில் 70% க்கும் அதிகமானவற்றை பயன்படுத்த முடிந்தது.  பின்னர் சந்தையில் ‘முதன் முதலாக’ Hutch  100%  Any time டேட்டா பொதிகளையும் இரவு நேர கட்டுப்பாடுகள் இல்லாமல் அறிமுகப்படுத்தினோம்.

மிகவும் பிரபலமான வரம்பற்ற, ஒரு மாதம் செல்லுபடியாகும் Unlimited YouTube பொதியை ரூ. 147 அறிமுகப்படுத்தியதுடன், அண்மையில் நாங்கள் ஒரு Unlimited Facebook/Messenger/WhatsApp பொதியை ரூ. 124 என்ற விலையில் அறிமுகப்படுத்தியதுடன், முழு 30 நாட்களுக்கு இது செல்லுபடியாகும்.

எங்கள் புகழ்பெற்ற cliQ தயாரிப்பு மிகவும் பிரபலமானது என நிரூபிக்கப்பட்டுள்ளதுடன், முன்பு 3G வலையமைப்பில் மட்டுமே இயங்கியதுடன் தற்போது எங்கள் புதிய 4G வலையமைப்பில் cliQ 4G ஐ அறிமுகப்படுத்தியுள்ளோம்!

சந்தையில் முதன்முறையாக off net  நிமிடங்கள் மற்றும் anytime டேட்டாவை உள்ளடக்கிய டேட்டா, குரல் மற்றும் டேட்டா bundle பொதிகளை நாங்கள் மிக அண்மையில் அறிமுகப்படுத்தினோம்.

இப்போது அனைத்து அம்சங்களுடனும், சந்தையின் அனைத்து பிரிவுகளுக்குமான தீர்வை வழங்க Hutch நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நாங்கள் நம்புகிறோம்.

கே: புதிய Bigger and Better Hutch இற்கு வாடிக்கையாளர்களின் பின்னூட்டல்கள் எவ்வாறு உள்ளன?

ப: கூட்டிணைக்கப்பட்ட வலையமைப்புடன், மீள அறிமுகப்படுத்தப்பட்ட  நாள் முதல்  எங்கள் Bigger and Better  வலையமைப்பு, பணத்துக்கேற்ற பெறுமதியை வழங்கும் தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களுக்கு வாடிக்கையாளர் வழங்கும் வரவேற்பானது சிறப்பாக உள்ளது.ஒவ்வொரு நாளும் அதிக சந்தாதாரர்கள் Hutch உடன் இணைவதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மொபைல் வலையமைப்பு வழங்குநரிடமிருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் – மலிவு, சிறந்த மொபைல் அனுபவம் ஆகியவற்றை வழங்குவதில் நாங்கள் வெற்றிகரமாக இருக்கிறோம் என்பதற்கு எங்கள் வளர்ந்து வரும் சந்தாதாரர் தளமே சாட்சியமாகவுள்ளது.நாங்கள் தொடர்ந்து நுகர்வோருடன் உணர்வுபூர்வமாக இணைந்து, தொடர்ச்சியான புத்தாக்கங்கள் மூலம் தேசத்தை வலுவூட்டி உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவோம்

கே: உங்களது எதிர்காலத்திற்கான திட்டங்கள் என்ன?

பதில்: மக்களது உண்மையான, தற்கால தேவைகளைப் பூர்த்திசெய்ய முடியாதுவிடின், தொழில்நுட்பம் பெறுமதி குன்றியதென HUTCHல் நாம் எப்போதும் நம்புகின்றோம். எமது நோக்கமானது எமது சேவைகளை இலகுவில் எல்லா பிரஜைகளுக்கும் அணுகக்கூடியவாறும், மலிவாகப் பெறக்கூடியவாறும் எப்போதும் தொடர்ந்து செயற்படுவதாகும். இதனைக் கருத்திற்கொண்டு, HUTCHல் உள்ள குழுவானது, வெறுமனே சந்தைப்படுத்தல் வித்தைகளன்றி, நுகர்வோருக்கான அர்த்தமுள்ள புத்தாக்கங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தும்.

இதற்கு ஈடான முக்கியத்துவம் என்னவெனில், எமது சந்தாதாரர் அனைவருக்கும் தொடர்ச்சியாக மொபைல் அனுபவத்தை வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில், HUTCH கடுமையாக உழைக்கும் என்பதாகும். ஏறத்தாழ முழு உலகளாவிய கைபேசி வலையமைப்புக்களால் எதிர்கொள்ளப்பட்ட முக்கிய சிக்கல் இதுவாகும். 3G, 4G, புரோட்பேண்ட் டேட்டா வலையமைப்புக்களால் மிகப்பெரிய டேட்டா தேவைகளை பூர்த்தி செய்த போதிலும், அதிகரித்திருந்த டேட்டா தேவையானது வலையமைப்பிலுள்ள சகல டேட்டா சந்தாதாரருக்குமான டேட்டா அனுபவத்தை பாதிப்படையச் செய்தத் தொடங்கியது. வலையமைப்பின் கொள்ளளவை விரிவடையச் செய்வது மாத்திரம் இந்த சிக்கலை தீர்ப்பதற்கான வழியல்ல.சகல டேட்டா சந்தாதாரரும் தொடர்ச்சியானதும், சீரானதுமான டேட்டா அனுபவத்தை எதிர்காலத்தில் பெறும் வகையில், அறிவுபூர்வமானதும், விரிவானதுமான நிர்வாக வழிமுறைகளும் HUTCHஇனால் உருவாக்கப்பட்டுள்ளன.

கே: 5Gக்கான உங்களது திட்டங்கள் தொடர்பில்?

பதில்: ஐரோப்பா, ஆசியா போன்றவற்றில் 5G வலையமைப்புகளையும், சேவைகளையும் ஏற்கனவே விரிவுபடுத்தும் செயன்முறையில் ஈடுபட்டுள்ள, மொபைல் செயற்பாடுகளில் ஈடுபடும் உலகளாவிய CKH குழுமத்தின் அங்கமே Hutch Sri Lanka ஆகும். HUTCH ஆனது தொடர்ந்து உலகளாவிய ரீதியான 5G வளர்ச்சியை அவதானிப்பதோடு, தற்போதுள்ள 4G சேவைகளை விட அதிகமான தேவைகள் உருவாகும் போது மட்டுமே, முழு அளவிலான 5G சேவைகளை இலங்கையில் ஆரம்பித்து வைக்கும்.

தற்போது, உலகளாவிய ரீதியாகவும், உள்நாட்டு ரீதியிலும் 5G ஐ அறிமுகப்படுத்தல் தொடர்பில் பெரும் வாதம் ஏற்பட்டுள்ளது. 5G குறித்தான அதிக தொழில்துறை மிகைப்படுத்தல் காணப்படுகின்ற போதிலும், 5G வலையமைப்பில் மிகப்பெரும் மேலதிக முதலீட்டை மேற்கொள்வதை நியாயப்படுத்துவதற்கான போதிய அளவு பாவனையாளர்கள் இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை. மேம்படுத்தப்பட்ட 4G வலையமைப்பால் ஆற்றமுடியாத, உங்களுக்குத் தேவையான இன்றைய சேவைகள் என்ன என்பதை தயவுசெய்து எனக்கு கூறுங்கள், அதனோடு அத்தகைய மேலதிக தேவைகள் ஒரு 5G வலையமைப்பில் முதலீடு செய்வதற்கும், அறிமுகப்படுத்துவதற்கும் போதுமானவையா?  என்பதே நான் எப்போதும் மக்களிடம் கேட்கும் கேள்வியாகும். இது மீண்டும் கட்டுப்படியாகும் தன்மை தொடர்பான கேள்வியாகும், கட்டுப்படியாகும் 5G கைப்பேசிகள் மற்றும் 5G இற்கான அப்ளிகேஷன்கள் எப்போது கிடைக்கும்.

இன்று 5G வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கு தேவையான சகல அனுபவங்களையும் HUTCHன் தாய் நிறுவனம் கொண்டுள்ளபோதும், நாம் முதலில் இலங்கை நுகர்வோருக்கு ஏற்ற காலத்தை நோக்க வேண்டும். அதன்பின் நிச்சயமாக எம்மால் செய்யமுடியும்!

இலங்கையிலுள்ள சகல மொபைல் சந்தாதாரர்களையும், HUTCHன் 4G அனுபவத்தை தாமாக பயன்படுத்தி, நாம் அவர்களது தேவைக்கு பொருத்தமானவர்களா என்பதை பரிசோதித்து பார்ப்பதற்கு மகிழ்ச்சியுடன் அழைப்பு விடுக்கின்றேன்.

3G மற்றும் 4G ஸ்மார்ட்போன் சந்தாதாரர்கள் இருவருக்கும் எல்லையற்ற சமூக ஊடாக டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தும் HUTCH

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் பிராட்பேண்ட் சேவை வழங்குனரான Hutch, Facebook, Messenger மற்றும் WhatsApp ஆகியவற்றை ஒரே வசதியான பொதியொன்றில் உள்ளடக்கிய எல்லையற்ற சமூக ஊடக திட்டங்களை அறிமுகப்படுத்தி இலங்கை நுகர்வோருக்கு மேலுமொரு புத்தாக்க சலுகையை முன்வைத்துள்ளது.

பாவனையாளர்கள் பேஸ்புக்கில் வீடியோக்கள், ஏனைய விடயங்களில் உலா வரும் போது எல்லையற்ற அனுபவத்தைப் பெற சமூக ஊடக திட்டங்கள் உதவுகின்றன, அதேவேளை விடயங்களை பகிர்ந்துகொள்ள பலரும் உபயோகிக்கும் Messenger க்கான அணுகலையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலும், இந்தத் திட்டம் இலங்கையில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் செட்டிங் செயலியான WhatsApp இல் எல்லையற்ற பயன்பாட்டை வழங்குகிறது.

இது பாவனையாளர்களுக்கு செட்டிங், குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு ஆகியவற்றின் நன்மையையும் வழங்குகிறது.

இந்த திட்டங்களின் தனித்துவம் என்னவெனில், ஸ்மாட்போன் பாவனையாளர்கள்  Hutch  3G வலையமைப்பு அல்லது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட bigger and better 4G வலையமைப்பு ஆகியவற்றின் ஊடாக அணுகலை  பெற்றுக்கொள்ளக் கூடியமையாகும். இது எந்தவொரு புதிய உற்பத்தி மற்றும் சேவையை செயற்படுத்தும் போது டிஜிட்டல் உள்ளடக்கத்திற்கு மிகவும் அவசியமென HUTCH  நம்பும் நடைமுறையாகும்.

இந்த திட்டங்களின் விலைகள் கட்டுப்படியாகும் வகையில் அமைந்துள்ளன. இதன் பிரகாரம் 30 நாட்களுக்கான எல்லையற்ற Facebook, Messenger  மற்றும் WhatsApp திட்டம் ரூபா 124/- க்கும், 7 நாட்களுக்கானது Rs.54/- என்ற விலையிலும் கிடைக்கின்றன.  இந்த திட்டங்களை *131#  என்ற குறுகிய குறியீட்டு எண்களின் மூலம் அல்லது  விற்பனை நிலையம் அல்லது HUTCH self-care செயலி ஊடாக ஒன்லைன் மூலம் திட்டத்தின் பெறுமதிக்கு ரீலோட் செய்வதன் மூலமும் செயற்படுத்திக் கொள்ள முடியும்.

இலங்கை நுகர்வோர்கள் தற்போது Hutch வழங்கும் பல வகையான தயாரிப்புகள் மூலம் பிரபல மொபைல் செயலிகளுக்கு எல்லையற்ற அணுகலை அனுபவித்து மகிழ முடியும். பாவனையாளர்களுக்காக நாம் அறிமுகப்படுத்தியுள்ள எல்லையற்ற Facebook, Messenger மற்றும் WhatsApp திட்டங்கள் அனைத்து இலங்கையருக்கும் கட்டுப்படியாகும் விலையில் டிஜிட்டல் சேவைகளை கொண்டு செல்லும் எமது தத்துவத்துக்கு மேலுமொரு உதாரணமாகும் என  Data, VAS  மற்றும் Digital  இற்கான பிரதி பொது முகாமையாளர், யார்தவ் மதியாபரணம் தெரிவிக்கின்றார்.

BID2WIN போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கிய zMessenger மற்றும் HUTCH

zMessenger நிறுவனம் Hutch நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த BID2WIN  போட்டி  அண்மையில் நிறைவடைந்ததுடன், இவ்வருடம் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு ஊக்குவிப்புகளின் வெற்றியாளர்களுக்கு இதன் போது பரிசுகளும் வழங்கப்பட்டன.

2020 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை இடம்பெற்ற Wagon R கார் ஊக்குவிப்பின் வெற்றியாளராக கடுவளையைச் சேர்ந்த அசேன் இமந்த குணசேன மற்றும் 2020 ஜூலை 1 ஆம் திகதி முதல் ஜூலை 20 ஆம் திகதி வரையான Honda Dioபைக் ஊக்குவிப்பின் வெற்றியாளராக மஸ்பொத்தயைச் சேர்ந்த பி.ஏ.ஜே. காமினி பெரேராவும் தெரிவாகினர்.

BID2WIN, மொபைல் சந்தாதாரர்களிடையே மிகவும் பிரபலமான போட்டியாகும். இது குறுந்தகவல் மூலமான விலைகோரல் மூலம் பாரிய பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகின்றது. இதற்கு அவர்கள் செய்ய வேண்டியது மிகவும் குறைந்த தனித்துவமான விலைகோரல் பெறுமதியை முன்வைப்பதாகும். இதன் போது வெற்றியாளருக்கு ஒதுக்கப்பட்ட பரிசு வழங்கப்படும். இந்த போட்டியை மிகவும் சுவாரஸ்யமாகவும், உற்சாகமாகவும் ஆக்குவது என்னவென்றால், மொபைல் போன்கள், மோட்டார் பைக்குகள், கார்கள் மற்றும் பல புதிய பரிசுகள் சீராக அறிமுகப்படுத்தப்படுகின்றமையாகும். போட்டியின் ஏற்பாட்டாளர்கள் போட்டியின் தொடக்கத்தையும் முடிவையும், பரிசு விபரங்களையும் மற்றும் ஒவ்வொரு போட்டியின் வெற்றியாளர்களையும் எஸ்.எம்.எஸ் அல்லது ஒளிபரப்பு ஊடகங்கள் வழியாக அறிவிக்கின்றனர்.

நாட்டின் முன்னணி மொபைல் சேவை வழங்குநர் என்ற வகையில், வாடிக்கையாளர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க புத்தாக்க ஊக்குவிப்புகளை HUTCH தொடர்ந்து ஆதரிக்கிறது, அதே நேரத்தில் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகளையும் வழங்குகிறது. அதன் Bigger and Better 4Gவலையமைப்பை பூர்த்தி செய்தவுடன், இது உண்மையிலேயே குறிப்பிடத்தக்க பயணமாக இருந்து வருகிறது. மேலும் அதன் நம்பிக்கையான வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிப்பதை தொடர்வதில் HUTCH மகிழ்ச்சியடைகிறது.

பெயர்களுடன் படங்கள் இடமிருந்து வலமாக

எரந்த சஞ்சீவ, சிரேஷ்ட தயாரிப்பு முகாமையளர் – zMessenger, வெற்றியாளர், Honda Dio Bike ஊக்குவிப்பு – காமினி பெரேரா – மஸ்பொத்த, வெற்றியாளர், Wagon R Car ஊக்குவிப்பு – அசேன் இமந்த குணசேன – கடுவளை, மட்ரீக் நஹோடுனா, முகாமையாளர் – VAS, Hutchison Lanka (Pvt) Ltd, கசுன் ஜயசூரிய, துணை முகாமையாளர் – VAS, Hutchison Lanka (Pvt) Ltd

மேம்பட்ட அனுபவத்தை வழங்க கொழும்பு வாடிக்கையாளர் சேவை மையத்தை மேம்படுத்தும் HUTCH

வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் முயற்சியின் ஓர் அங்கமாக, இலங்கையின் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் மொபைல் புரேட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொழும்பின் இதயப் பகுதியில் பம்பலபிட்டிய அலுவலகங்களில் அமைந்துள்ள தனது பிரதான வாடிக்கையாளர் சேவை மையத்தை அண்மையில் மேம்படுத்தியது. இந்த சம்பிரதாயபூர்வ நிகழ்வில் திருமதி. யோகலதாகினி திருக்குமார் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்ததுடன், HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திரு.திருக்குமார் நடராசா மற்றும் HUTCH Sri Lanka வின் முகாமைத்துவ உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

HUTCH அண்மையில் நாடு முழுவதும் தனது உலகத்தரம் வாய்ந்த 4G வலையமைப்பை செயற்படுத்தியதன் மூலம் வாடிக்கையாளர்கள் எங்கும் இருப்பதற்கு வலுவூட்டியது. அதன் 2G மற்றும் 3G வலையமைப்புகளின் விரிவாக்கம் உள்ளிட்ட இந்த பாரிய வலையமைப்பு விரிவாக்கம், HUTCH தனது வாடிக்கையாளருக்கு சிறந்த வலையமைப்பு அனுபவத்தை வழங்க உதவியுள்ளதுடன், அவர்களின் முக்கிய சிக்கல்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட மலிவான மற்றும் புத்தாக்கமான தயாரிப்புகளின் வரிசையை வழங்குகிறது.