எங்களை பற்றி

நாடளாவியரீதியில் மொபைல் தொலைதொடர்பாடல் வேவைகளை வழங்கிவரும் நாம், இலங்கையில் மிகவும் பாரிய 3G வலையமைப்புக்களுள் ஒன்றைக் கொண்டிருப்பதையிட்டு மிகவும் பெருமையுடன் உள்ளோம். 2012 ஆம் ஆண்டில் 3G தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய நாம், அனைத்து 25 மாவட்டங்களிலும் நாடளாவியரீதியில் வலையமைப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளோம்.

ஹட்சிசன் ரெலிகொமினியுகேஷன்ஸ் லங்கா (பிரைவேட்) லிமிட்டெட் (“ஹட்சிசன் ரெலிகொம் லங்கா”) 2004 ஆம் ஆண்டில் தனது ஜிஎஸ்எம் சேவையை ஆரம்பித்திருந்தது. ஹட்சிசன் ஏசியா ரெலிகொம்மின் உறுப்பு நிறுவனம் என்ற வகையில் குளோபல் போர்ச்சூன் 500 பல்தேசிய கம்பனிகளுள் ஒன்றாக, ஹொங்கொங் இனைத் தளமாகக் கொண்ட ஹட்சிசன் வம்போ லிமிட்டெட்டின் அங்கமாக அதன் வலிமையின் மூலமான ஆற்றல்களுடன், 52 நாடுகளில் பல்வேறுபட்ட வியாபார த் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது. ஹட்சிசன் வம்போ லிமிட்டெட் ஹொங்கொங் பங்குச் சந்தையின் பிரதான சபையில் நிரற்படுத்தப்பட்டுள்ள பாரிய நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றது. தொலைதொடர்பாடல் சேவைகளுக்குப் புறம்பாக, உட்கட்டமைப்பு, மின்வலு, துறைமுகங்கள் மற்றும் தொடர்புபட்ட சேவைகள், அசைவற்ற ஆதன இருப்பு, ஹோட்டல்கள், சில்லறை வியாபாரம் மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளிலும் வியாபாரத் தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது.

ஹட்சிசன் ஏசியா ரெலிகொம்மின் மொபைல் தொலைதொடர்பாடல் சேவைகள் இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய அபிவிருத்திடைந்து வருகின்ற சந்தைகளில் கிடைக்கப் பெறுகின்றன. ஹட்சிசன் வம்போ குழுமத்தின் தொலைதொடர்பாடல் சேவைகள் பிரிவு அவுஸ்திரேலியா, அவுஸ்திரியா,டென்மார்க், ஹொங்கொங், அயர்லாந்து, இத்தாலி, மக்காவு, சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் 3G தொழிற்பாடுகளைக் கொண்டுள்ள “3” குழுமத்தையும் உள்ளடக்கியுள்ளது. ஹட்சிசன் ஏசியா ரெலிகொம் மற்றும் ஹட்சிசன் வம்போ லிமிட்டெட் தொடர்பான மேலதிக தகவல்களை அறிந்து கொள்ள www.hutchison-whampoa.com.