ஸ்மார்ட் சியார்

உங்கள் fileகளை பலருடன் பகிரவேண்டுமா ?? அப்படியானால் உடனே ஸ்மார்ட் சியார் உடன் இணையுங்கள்

 • உங்களது சொந்த சாதங்களுக்கடையில் அல்லது​ நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே பகிரலாம்.
 • பகிரப்படும் சாதனங்கள் நாட்டின் எப்பகுதியிலும் இருக்கலாம் என்பதால் வை-பை ஸ்பாடை (wi-fi spot) விட மேலானது.
 • விசேட பொதிகள் தேவையில்லை, ஹட்சின் எந்த தரவு பொதிகளையும் பயன்படுத்தலாம்.
 • வாடகை அல்லது பொறுப்புகள் இல்லை
 • இலகுவாக சாதனங்களை சேர்க்கவும் நீக்கவும் முடியும்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

‘ஸ்மார்ட் சியார்’ என்றால் என்ன?

ஒரு ஹட்ச் இணைப்பில் (ஆதரவாலர்) இருந்து பல ஹட்ச் இணைப்புகளுக்கு (உறுப்பினர்) தரவுக்கோட்டாக்களை பகிர செயற்படுத்தப்படும் ஒரு இலவச சேவையாகும்.

நான் எதற்காக ‘ஸ்மார்ட் சியார்’யை பயனபடுத்தவேண்டும்?

செயற்படுத்தப்பட்ட பல தரவு சாதனங்களை பயன்படுத்தும் தனி நபர்கள், மற்றும் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ரீலோட் செய்யும் தனி நபர்களுக்களின் தேவையை பூர்த்திசெய்ய விசேடமாக வடிவமைக்கப்பட்டதே ‘ஸ்மார்ட் சியார்’

 

பல சாதனங்களை பயன்படுத்தும் தனி நபராக இருந்தால்

 • ஒவ்வொரு சாதனத்திற்கும் வெவ்வேறாக ரீலோட் செய்யவோ, தரவு பொதிகளை செயற்படுத்த தேவையில்​லை
 • ​வெவ்வேறு சாதனங்களுக்கான பல்வேறு கோட்டாக்களை செயற்படுத்தல் மற்றம் நிர்வாகிக்கும் தொந்தரவில்லை
 • பெரிய பொதிக​ளை கொள்வனவு செய்து நல்ல பெறுமதிகளை அனுபவிக்கலாம்.
 • சிம் அட்டைகளை பல்வேறு சாதனங்களுக்கு மாற்றும்  தேவையை நீக்குகின்றது.

 

குடும்பத்தினருக்கு ரீலோட் செய்பவராக இருந்தால்

 • பணத்திற்காக தங்கியிருப்போர் உங்களை தொந்தரவு செய்யத்தேவையில்லை
 • கோட்டாக்கள் இல்லாத நிலையை குடும்பத்தினர் சந்திக்கவேண்டியதில்லை
 • தங்கியிருப்போருக்கு​ கொடுக்கும் பணத்தில் வரவு​-செலத்திட்ட கட்டுப்பாடு

அனைத்து ஹட்ச் வாடிக்கையாளர்களுக்கும் இது கிடைக்குமா?

ஆம், ​அனைத்து முற்கொடுப்பனவு பிற்​கொடுப்பனவு இணைப்புக்களுக்கும் இது கிடைக்கும்

மேலதிக FAQs

தரவுகள் பகிர்வதை எவ்வாறு ஆரம்பிப்பது?

 

*131*8#யை அழைத்து ‘Start Sharing’யை தெரிவு செய்வதன் மூலம் தரவு மீதிகளை பகிர விரும்பும் ஹட்ச் இணைப்பினை சேர்த்துக்கொள்ளலாம்

இந்த சேவைக்காக கட்டணம் அல்லது வாட​கை உண்டா?

 

இந்த சேவை அனைத்து ஹட்ச் பாவனையாளருக்கும் இலவசம்

நான் எந்த முற்​கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்புடனும் தரவு​​ கோட்டாக்களை பகிர முடியுமா?

 

எந்த முற்கொடுப்பனவு இணைப்புகளும் ஏனைய முற்கொடுப்பனவு இணைப்புகளுடன் பகிர முடியும்
எந்த பிற்கொடுப்பனவு இணைப்புகளும் ஏனைய பிற்கொடுப்பனவு இணைப்புகளுடன் பகிர முடியும்

எத்தனை உறுப்பினர் சாதனங்களை எனது தரவு​​ கோட்டாவில் இணைக்கலாம்?

 

நீங்கள் 10 உறுப்பினர் சாதனங்​களுடன் தரவுகளை பகிர்ந்து​ கொள்ளலாம்

நான் ஒரே நேரத்தில் ஆதரவாலராகவும் உறுப்பினராகவும் இருக்கலாமா?

 

ஒரு ஆதரவாலர் இணைப்பு உறுப்பினர் இணைப்புகளுடன் மட்டுமே தரவுகளை பகிரலாம். ஆனால் அது இன்னொரு ஆதரவாலருக்கு உறுப்பினராக இருக்கமுடியாது.

எந்த தரவுக் கோட்டாக்களை பகிரலாம்?

 

Pocket, Value, Value Mega, Day Time Blast, Day & Night & Ghost என அனைத்து த​ரவுப்பொதிகளும் பகிரப்படலாம்.

எந்த ஹட்ச் தரவு பொதியையும் பகிர நான் செயற்ப்படுத்தலாமா?

 

2G, இடைவிடாத இணையபொதிகள் தவிர்ந்த ​ஏனைய Pocket, Value, Value Mega, Day Time Blast, Day & Night & Ghost என அனைத்து தரவுப்பொதிகளில் இருந்து செயற்படுத்தலாம்.​ மேலே குறிப்பிட்ட எந்த ஒரு தரவுப்பொதியினதும் த​ரவு மீதிகளை பகிர்வதற்காக ஏற்றிக்கொள்ளலாம்.

எந்த பொதிகள் பகிர்வதில் ​இருந்து விலக்கப்பட்டுள்ளன?

 

2G மற்றும் இடைவிடாத இணையபொதிகள் பகிரப்படமுடியாதவை

ஒவ்வொறு உறுப்பினருக்கும் (நபர்/ சாதனம்) நான் தனிப்பட்ட​ கோட்டாக்கள் ஒதுக்க வேண்டுமா?

 

இது வீட்டில் உள்ள ADSL வை-பை இணைப்பு தொழிற்ப்படுவதுபோன்​று அனைத்து உறுப்பினர்களுக்கும் (நபர்/ சாதனம்)​​ கோட்டா கிடைக்கும். தனிப்பட்ட கோட்டாக்கள் ஒதுக்கும் தொந்தரவில்லை.

14. உறுப்பினர் ஒருவர் எவ்வாறு தான் ஒரு ஆதரவாலரால் தரவு பகிர இணைக்கப்பட்டதை அறிவார்?

 

ஆதரவாலரின் பகிர்தல் பட்டியலில் உறுப்பினர் இணைக்கப்பட்டது தொடர்பாக ஆதரவாலருக்கும் உறுப்பினருக்கும் குறுந்தகவல் ஊடாக அறிவிக்கப்படும்.

ஆதரவாலர் சார்பான கேள்விகள் மற்றும் பதில்கள்

ஆதரவாலராக நான் பிற்காலத்தில் தரவு மீதிகளை உறுப்பினர் அல்லது சாதனங்களுக்கு பகிர்வதை நிறுத்தமுடியுமா?

ஆம், ஒரு ஆதரவாலர் தனியொரு இணைப்பு அல்லது தரவு பகிர்தல் சேவையை அனைத்து உறுப்பினருக்குமாக முற்றாக செயலிலக்க செய்யலாம்.

 1. தெரிவு செய்யப்பட்ட உறுப்பின​ரை நீக்குவதற்கு:  *966*8# க்கு அழைத்து ‘Manage A/C’யை தெரிவு செய்து ‘Remove connections’யை தெரிவு செய்யுங்கள்
 2. ​ அ​னைத்து இணைப்புகளுக்கும் பகிர்வதை செயலிலக்க செய்ய: *966*8# க்கு அழைத்து ‘Manage A/C’யை தெரிவு செய்து ‘Deactivate Sharing’யை தெரிவு செய்யுங்கள்

 

ஆதரவாலராக பகிரப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை எவ்வாறு சோதனை செய்து​ கொள்வது?

*966*8# க்கு அழைத்து ‘Manage A/C’யை தெரிவு செய்து ‘Current Sharing List’யை தெரிவு செய்வதன் மூலம் உங்கள் உறுப்பினரின் பட்டியலைப் சோதனை செய்து​ கொள்ளலாம்.

 

ஆதரவாலராக தரவு மீதிகளை எவ்வாறு சோதனை செய்து​ கொள்வது?

*966*8# க்கு அழைத்து ‘Manage A/C’யை தெரிவு செய்து ‘Check Shared Balances’யை அழைத்து பகிரப்பட்ட தரவு மீதிகளை சோதனை செய்து​ கொள்ளலாம்.

 

*334# க்கு அழைத்து, அல்லது ‘bal’ என 334க்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் முற்​கொடுப்பனவு மீதிகளை சோதனை செய்து​ கொள்ளலாம்.

*444# க்கு அழைத்து, அல்லது ‘bal’ என 444க்கு குறுந்தகவல் அனுப்புவதன் மூலம் பிற்​கொடுப்பனவு மீதிகள் மற்றும் நிலுவைகளை சோதனை செய்து​ கொள்ளலாம்.

 

ஆதரவாலராக, தரவுகோட்டாக்கள் குறைந்துவிட்டன என்பதை நான் எவ்வாறு அறிவேன்?

தன்னியக்கப்பட்ட குறுந்தகவல் ஊடாக மீதிகள் குறைந்துள்ளதென அறிவித்தலை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்

 

எனது பண மீதியை உறுப்பினர் அல்லது சாதனங்களுக்கு மாற்றம் செய்ய முடியுமா?

ஆம். *966*8#யை அழைத்து ‘Manage A/C’யை தெரிவு​செய்து ‘Recharge connection’யை தெரிவு செய்வதன் மூலம் உறுப்பினர் அல்லது சாதனங்களுக்கு ரீலோட் செய்ய முடியும்.

உறுப்பினர் சார்பான கேள்விகள் மற்றும் பதில்கள்

உறுப்பினராக, ஒரு ஆதரவாலரிடம் இருந்து தரவுகளை பெற்றுக்கொள்வதை நிறுத்தமுடியுமா?

ஆம், முடியும். *131*8#யை ​அழைத்து ‘Manage A/C’யை​ தெரிவசெய்து  ’Disable Sharing’யை தெரிவு​ செய்யவும்.

 

உறுப்பினராக, கிடைக்கும் பிகரப்பட்ட தரவு மீதியை எவ்வாறு சோதனை செய்யலாம்?

*131*8#யை ​அழைத்து ‘Manage A/C’யை​ தெரிவு செய்து Available Shared Balance’யை தெரிவு செய்வதன் மூலம் கிடைக்கும் பிகரப்பட்ட தரவு மீதியை எவ்வாறு சோதனை செய்யது​கொள்ளலாம்.

 

உறுப்பினராக, ஆதரவாலரின் மீதி குறைவாக உள்ளதை எவ்வாறு அறிவேன்?

ஆதரவாலரின் மீதி குறைவாக உள்ளபோது உறுப்பினருக்கு அறிவிக்க தன்னியக்க அறிவித்தல் ஏதும் இல்லை. உறுப்பினரின் கணக்கிற்கு கட்டணம் அறவிடல் தடையிலாமல் மாற்றப்படும். ஏற்றப்பட்ட தரவு பொதிகள் உறுப்பினரால் பாவிக்கப்படும் அல்லது பொதிகள் ஏற்றப்பாடவிடிலும் நியமக்கணக்கு கட்டணம் உண்டு.

 

ஆதரவாலரிடம் மீதி இல்லாத தருணத்தில் உறுப்பினர் தனது சொந்த தரவு பொதிகளை​  செயற்ப்படுத்த முடியுமா?

 • *131#யினை அழைத்து எந்த ஒரு பொதியையும் தெரிவு செய்ய முடியும்.
 • வன்ப்பூட்டை பாவிப்பவராக இருந்தால்,  https://www.hutch.lk/know-your-internet-packs/ விஜயம் செய்து, பொதியை தெரிவு செய்யலாம். ‘உற்பத்தி’ பக்கத்தினை விஜயம் செய்து குறுங்தகவல் மூலம் செயற்படுத்தும் குறியீடுகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

 

உறுப்பினர் இணைப்பில் மீதி இல்லாதபோதும் உறுப்பினர் தரவு பகிர்வை பாவிக்கமுடியுமா?

தரவு பகிர்வை பயன்படுத்த உறுப்பினர் இணைப்பின் கணக்கிலும் மீதி இருத்தல் அவசியம்.

 

உறுப்பினராக, தரவைப் பகிர்வதற்கு நானும் கணக்கு மீதியை​ பேணல் அவசியமா?

ஆம். ஹட்ச் ஸ்மார்ட் சியார்யை செயற்படுத்த நேர்கணிய கணக்கு மீதியை வைத்திருத்தல் வேண்டும்.

 

ஆதரவாலர் நான் பயன்படுத்தும் பகிரப்பட்ட தரவின் அளவை அறிவாரா?

இல்லை. அவரால் தனிப்பட்ட உறுப்பினரின் தரவு நுகர்வு பற்றி அறிய முடியாது.