ஜோதிட சேவை

உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் பதில் வேண்டுமா?

தற்போது பிரத்தியேக ஜோதிட சேவையை USSD இல் பெறலாம்! வெற்றி, மகிழ்ச்சி மற்றும் அதிர்ஷ்டம் நோக்கி நகரும் உங்கள் தினசரி வாழ்க்கைக்கு பொருத்தமான தினசரி பலன் குறிப்புகள் மற்றும் ஜோதிட நிபுணரின் ஆலோசனைகளை பெறலாம்.
Hutch ஜோதிட சேவை என்பது, பத்திரிகைகள், தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவற்றினூடாக அறிந்து கொள்ளும் பாரம்பரிய இராசி பலன் கணிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பிறந்த திகதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்றவற்றின் அடிப்படையில் Hutch ஜோதிட சேவையினூடாக கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் இராசியின் பிரகாரம், தினசரி பலன்களை நீங்களும் பெற்றுக் கொள்ளலாம்.

இந்த சேவையை வழங்குவது யார்?

உங்களுக்கான இராசி பலன்களை ஜோதிட நிபுணரான தேசபந்து சுமனதாச அபேகுணவர்தன வழங்குகின்றார்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Hutch ஜோதிட சேவை என்றால் என்ன? (ஹந்தஹன)

”ஹந்தஹன” என்பது ஜோதிட சேவையாக அமைந்துள்ளதுடன், Hutch வாடிக்கையாளர்களுக்கு ஜோதிட கணிப்புகளை வழங்குகின்றது.

பத்திரிகைகள் மற்றும் இதர தொலைத்தொடர்பு சேவைகள் வழங்குநர்களால் வழங்கப்படும் ஜோதிட கணிப்புகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகின்றது?

Hutch ஜோதிட சேவை என்பது, பத்திரிகைகள், தொலைக்காட்சி, ரேடியோ ஆகியவற்றினூடாக அறிந்து கொள்ளும் பாரம்பரிய இராசி பலன் கணிப்புகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. பிறந்த திகதி, பிறந்த நேரம் மற்றும் பிறந்த இடம் போன்றவற்றின் அடிப்படையில் Hutch ஜோதிட சேவையினூடாக கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இலங்கையின் சனாதிபதியின் ஜோதிட ஆலோசகர் தேசபந்து சுமனதாச அபேகுணவர்தன அவர்களினால் உங்களுக்கு தினசரி பலன்கள் கணித்து வழங்கப்படும்.

இந்த சேவை சகல Hutch வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படுகின்றதா?

ஆம். Hutch ஜோதிட சேவை தற்போது Hutch முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு SMS ஊடாக வழங்கப்படுவதுடன், விரைவில் இந்த சேவையை IVR ஊடாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

இந்த சேவையிலிருந்து எந்த வகையான ஜோதிட / உள்ளம்சங்களை பெற்றுக் கொள்ளலாம்?
மூன்று வகையான சேவைகள் காணப்படுகின்றன. உங்கள் தெரிவுக்கமைய பின்வரும் எந்தவொரு பக்கேஜ்களையும் நீங்கள் தெரிவு செய்து கொள்ளலாம்.

  • தினசரி பலன்கள் (SMS ஊடாக பிரத்தியேக ஜோதிட வாசிப்புகள்)
  • அதிர்ஷ்ட இலக்கம் (உங்கள் குணவியல்புகளை ஆராய்ந்து, உங்களின் உண்மை குணவியல்புகளை உணர்ந்து கொள்ளுங்கள்)
  • பஞ்சாங்கம் (பாரம்பரிய ஜோதிட முறைப்படி, உங்கள் சுப நேரங்களை முற்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள்)

இந்த ஜோதிட கணிப்புகளை எந்த நேரத்தில் நான் பெறுவேன்?

  • தினசரி பலன்கள் (சாதரணமாக 2 தகவல்கள்) வாடிக்கையாளர்களுக்கு தினசரி காலை 7 மணிக்கு அனுப்பப்படும்.
  • ”பஞ்சாங்க” தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு தினசரி காலை 7 மணிக்கு அனுப்பப்படும்.
  • அதிர்ஷ்ட இலக்கம் பற்றிய தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 7 மணி முதல் அனுப்பப்படும்.

வாடிக்கையாளர்கள் இந்த சேவைக்கு தம்மை பதிவு செய்து கொண்ட மறுநாள் முதல் இந்த தகவல்கள் அனுப்பப்படும்.

உதாரணம்: வாடிக்கையாளர் ஒருவர் ஜுலை 18 ஆம் திகதி பதிவு செய்தால், தமது முதல் தகவலை ஜுலை 19ஆம் திகதி பெறுவார்.

இந்த சேவையுடன் நான் எவ்வாறு பதிவு செய்து கொள்வது?
எந்தவொரு சேவையுடனும் வேண்டுமானாலும் இடைநிறுத்திக் கொள்ளலாம். எந்தவொரு சேவையுடனும் வாடிக்கையாளர் தம்மை பதிவு செய்து கொள்ள, முதலில் *336# USSD குறியீட்டை அழுத்தி, தமது மொழித் தெரிவை மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னர், தாம் செயற்படுத்திக் கொள்ள விரும்பும் சேவையை தெரிவு செய்யலாம். வாடிக்கையாளர் பதிவு செய்து கொண்டதை உறுதி செய்ததும், பதிவு செய்தமை பூர்த்தி தொடர்பான தகவலை USSD வழங்கும்.

உதாரணம்: *336# ஐ அழைத்து
2 ஐ தெரிவு செய்யவும். ஆங்கில மொழிக்கு
1 ஐ தெரிவு செய்யவும். தினசரி பதிவுகளுக்கு
1 ஐ தெரிவு செய்யவும். பதிவு செய்து கொள்ள
1ஐ அழுத்தவும். பதிவு உறுதி செய்யப்படும்.
நன்றி!

இந்த சேவையை எனக்கு பிடித்த மொழியில் பெற முடியுமா?
ஆம், ஜோதிட கணிப்பு எதிர்வுகூறல் SMS ஐ நீங்கள் சிங்களம் அல்லது ஆங்கில மொழியில் பெறலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட சேவைக்கு என்னால் பதிவு செய்து கொள்ள முடியுமா?
ஆம், முடியும் ஆனாலும் உங்களுக்கு அதிர்ஷ்ட இலக்கங்கள் பற்றிய சேவை தேவைப்பட்டால், ஜோதிட சேவை மற்றும் விசேட அறிவிப்பு சேவைகளுக்கு கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும்.

இந்த சேவைக்கு அறவிடப்படும் கட்டணங்கள் யாவை?

  • கட்டணம் 1: தினசரி பலன்களுக்கு மாதாந்தம் ரூ. 30.00 + வரிகள்.
  • கட்டணம் 2: அதிர்ஷ்ட இலக்கங்கள் சேவைக்கு மாதாந்தம் ரூ. 20.00 + வரிகள்.
  • கட்டணம் 3: பஞ்சாங்க சேவைக்கு மாதாந்தம் ரூ. 20.00 + வரிகள்.

பதிவு செய்து கொண்ட தெரிவுக்கமைய கட்டணங்கள் அறவிடப்படும் என்பதுடன், நுண் கட்டண அறவீடும் காணப்படும். வாடிக்கையாளரின் வடிவுருவு தயாரிப்பு பூர்த்தி செய்யப்பட்டால் மாத்திரம் கட்டணம் அறவிடப்படும் (உதாரணம்: பிறந்த இடம், பிறந்த நேரம் போன்றன பூர்த்தி செய்யப்பட்டதும்)

நான் வழங்கிய தகவல் தவறாக இருப்பின், அவற்றை சீர்ப்படுத்திக் கொள்ள வாய்ப்பு எனக்கு கிடைக்குமா?
ஆம், *336# எனும் இலக்கதை அழுத்தி உங்கள் பிறந்த திகதி/நேரம்/இடம் ஆகியவற்றை மாற்றிக் கொள்ளலாம்.

இந்த சேவையை எவ்வாறு இடைநிறுத்துவது?
வாடிக்கையாளர்கள் இந்த சேவையை எப்போது வேண்டுமானாலும் இடைநிறுத்திக் கொள்ளலாம். இந்த சேவையை இடைநிறுத்த வேண்டுமாயின், உங்கள் தெரிவுக்குரிய பக்கேஜ் பெயருடன் *336# USSD குறியீட்டை அழுத்தவும்.