சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்திகளுக்கு HUTCH Champion’s Challenge 2015 நிகழ்வில் இனங்காணல் அங்கீகாரம்

பதிவிறக்கம் செய்க

சந்தைப்பங்கு மற்றும் வருமானத்தில் நிறுவனம் சாதகமான வளர்ச்சியைப் பதிவாக்கியுள்ளது

இலங்கையில் அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருகின்ற 3G வலையமைப்பான HUTCH அண்மையில் இடம்பெற்ற “HUTCH Champion’s Challenge 2015” விருதுகள் நிகழ்வில் நிறுவனத்தின் அதிசிறந்த விற்பனைப் பெறுபேறுகளை வெளிப்படுத்தியவர்களுக்கு இனங்காணல் அங்கீகாரத்தை வழங்கியிருந்தது.

அண்மைகாலத்தில் நிறுவனத்தின் விற்பனை​யைப் பொறுத்தவ​ரையில் குறிப்பாக 3G தரவு கணிசமான அளவில் அதிகரிப்பை வெளிப்படுத்துயுள்ளது. நடெங்கிலும் தொழில் நேர்த்தி மற்றும் மேன்மையான சேவையை வெளிப்படுத்திய வழமையான விற்பனை அணியே இதனை சிறப்பாக முன்னெடுப்பதற்கான மூலகாரணமாக ​அமைந்தது.

இந்த நிதியாண்டின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டுப் பகுதிக்களில் மிகச்சறந்த விற்ப​னைப் பெறுபேறுகளை வெளிப்படுத்திய விற்பனை ஆளணியினரை இனங்கண்டு உரிய அங்கீகாரத்தை வழங்கி முழு ஆண்டிலும் அவர்கள் இந்த சிறப்பான பெறுபேறுகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவர்க​ளை ஊக்குவிப்பதே அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட HUTCH Champion’s Challenge 2015 விருதுகள் வைப்வத்தின் பிரதான நோக்கமாகும்.

400 இற்கும் மேற்பட்ட HUTCH ஊழியர்கள் மற்றும் நாடெங்கிமிருந்து வருகைதந்த விற்ப​​னைப் பங்காளர்கள் என பெரும் எண்ணிக்கையானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். HUTCH இன் எதிர்காலத் திட்டங்களை மற்றும் முன்னெடுப்புக்கள் தொடர்பில் விற்பனை ஆளணியினரிக்கும் இந்நிகழவில் எடுத்துக் கூறப்பட்டதுடன் சந்தையில் காணபடபடும் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் தொடர்பில் அவர்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளும் கேட்டறியப்பட்டன.

இந்த ஆண்டில் இது வரையான காலப்பகுதியில் அணியின் முயற்சிகள் தொடர்பில் HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் “கடுமையான போட்டிச் சூழலுக்கு மத்தியிலும் குறிப்பாக 3G தரவினைக் கருதுகையில் இலங்கைல் மொ​பைல் தொலைதொடர்பாடல்கள் தொழிற்துறையில் HUTCH சவால்மிக்க ஒரு தொழிற்பாட்டாளராக எழுச்சி கண்டுள்ளது. இந்த மகத்தான சாத​னைப் பெறுபேறுகளுக்காக ஒட்டுமொத்தHUTCH விற்பனை அணிக்கும் நான் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை புதிதாக 3G வாடிக்கையாளர்களை உருவாக்கி நிறுவனத்தின் பரந்த கையான உற்பத்திகள் மற்றும் சேவைகள் மூலமாக தற்போதைய 3G வாடிக்கையாளர்களை எந்நேரமும் திருப்பத்திப்படுத்துவதையும் உறுதி​செய்த விற்பனை ஊழியர்களை நான் கட்டாயமாகக் குறிப்பிட விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.

“பெறுபேறுகளை மையமாகக் கொண்ட எமது நிறுவனம் அதற்கமைவாக ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கவேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கைகொண்டுள்ளதுடன் அவர்களுக்கிடையில் ஆராக்கியமான போட்டி மற்றும் உண்மையான ஒன்றுபட்ட உழைப்பை ஊக்குவிக்கின்றது. இத்தகைய சாதகமான ஒரு கலாச்சாரம் மற்றும் பணிச்சூழ​லே ஊழியர்கள் அதியுநச்ச மட்டத்திலான பெறுபேறுபளை வெளிப்படுத்த உதவியுள்ளன” என்று HUTCH நிறுவனத்தின் விற்ப​னை மற்றும் சந்தைப்படுத்தல் துறையின் தலைமை அதிகாரியான றம்ஞீனா மொர்செத் லாய் அவர்கள் குறிப்பிட்டார்.

HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா மற்றும் விற்பனை சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான றம்ஞீனா மொர்செத் லாய் ஆகியோர்  உயரிய பிரிவுகளில் அதிசிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி வைக்கின்றனர். இரேஷ்  நுவன் குமார, ஏ. சமன் குமார, எச. ஏ. சுரங்க சஞ்சீவ, ஜானக துஷார, கே. எல். ஏ. அனுராத சில்வா, ஜி. ஆ.பீ. பண்டார மற்றும் கே. சி. சம்பத் பெரேரா ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.

HUTCH நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா மற்றும் விற்பனை சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான றம்ஞீனா மொர்செத் லாய் ஆகியோர் உயரிய பிரிவுகளில் அதிசிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்திய வெற்றியாளர்களுக்கு விருதுகளை வழங்கி வைக்கின்றனர். இரேஷ் நுவன் குமார, ஏ. சமன் குமார, எச. ஏ. சுரங்க சஞ்சீவ, ஜானக துஷார, கே. எல். ஏ. அனுராத சில்வா, ஜி. ஆ.பீ. பண்டார மற்றும் கே. சி. சம்பத் பெரேரா ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர்.