இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் மொபைல் புரோட்பேண்ட் சேவை வழங்குனரான HUTCH, கொவிட் தொற்றுநோய்க்கு மத்தியில் புத்தம் புதிய Oracle Fusion Cloud Enterprise Resource Planning (ERP) தொகுதியை வெற்றிகரமாக நிறுவி செயற்படுத்தியதன் மூலம், அதன் விரைவான மாற்றமுறும் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

Oracle உள்ளிட்ட பெரும்பாலான அதே வகையைச் சேர்ந்த ERP system முழுமையாக பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் தற்போது தொழில்நுட்பம் Cloud  நோக்கி நகர்கின்றது. அந்த வகையில் Hutch முன்னோக்கி அடியெடுத்து வைத்து, எதிர்காலத்திற்கான Oracle Cloud  ERP யினை செயல்படுத்த முடிவு செய்தது.

இத்திட்டம் Hutch Sri Lanka வின் தாய் நிறுவனமான CK Hutchison குழுமத்தால் அதன் உலகளாவிய புத்தாக்க கண்டுபிடிப்புகள் பிரிவான CKH-IOD மூலம் வசதியளிக்கப்பட்டுள்ளதுடன், LOLC Technologies Limited ஆனது Oracle இன் சர்வதேச பிளாட்டினம் பங்குதாரரான EVOSYS Global உடன் கூட்டுசேர்ந்து இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நிபுணத்துவ ஆலோசனை சேவைகளை பெறுவதற்கான செயல்பாட்டில் PWC-Sri Lanka உடன் Hutch கைகோர்த்துள்ளது.

Hutch இன் பிரதம நிதி அதிகாரி லலித் பெனாண்டோ இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “Oracle Fusion Cloud ERP தொகுதியின் அமுலாக்கத்தின் மூலம், உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படும் சிறந்த நடைமுறைகளை கடைப்பிடித்து நாம் எமது இலக்குகளை அடைய உதவும் வகையில் வர்த்தகத்தை மாற்றியமைக்க முடியும். Oracle ERP தொகுதியானது, ஒரு முழுமையான, நவீன, cloud ERP தொகுப்பாகும். இது சுய செயன்முறைகளை தன்னியக்கமாக்கும் AI, நிகழ்நேரத்தில் சந்தை மாற்றங்களுக்கு பதிலளிப்பதற்கான பகுப்பாய்வு மற்றும் தற்போதைய நிலையில் இருந்தவாறு போட்டித்தன்மையான நன்மைகளைப் பெறுவதற்காக தன்னியக்க புதுப்பிப்புகளை மேற்கொள்ளல் போன்ற மேம்பட்ட திறன்களை வழங்குகிறது. .

இந்த ERP தொகுதியை வெற்றிகரமாக உரிய நேரத்தில் செயல்படுத்தியமையானது மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. காரணம் இது கொவிட் தொற்றுநோய்களின் போது விற்பனையாளர்கள் மற்றும் திட்ட ஆலோசகர்களால் முழுமையாக அனைவரையும் அலுவலகத்தில் இணைத்து திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கப்படவில்லை.” என்றார்.

Oracle Fusion கட்டமைப்பானது, Oracle Fusion Supply Chain, Oracle Fusion Finance, Oracle Integration Cloud (OIC) ஆகியவற்றை கொண்டுள்ளது. சிறந்த நடைமுறைகள், நவீனமயமாக்கப்பட்ட முக்கிய செயல்பாடுகள் மற்றும் தன்னியக்க நிதி மற்றும் விநியோக சங்கிலி வணிக செயல்பாடுகள், முக்கிய செயல்பாடுகள் மற்றும் வணிக உதவி தொகுதிகளை (OSS/BSS) ஒருங்கிணைத்து செயல்படும் தொலைத்தொடர்புச் சூழலில், முன்னேற்றகரமான முடிவெடுத்தல் மற்றும் செயல்பாட்டுத் திறன்களை வழங்குதல் ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்த தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த ERP திட்டமானது 2019 இல் ஆரம்பிக்கப்பட்ட Etisalat Lanka உடன் Hutch இன் இணைப்பின் சமீபத்திய பகுதியாகும். இது மேம்பட்ட 4G வலையமைப்பின் நிறுவல் மற்றும் அதன் பின்புல அலுவலக செயல்பாடுகளின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவற்றிலிருந்து முழு செயல்பாட்டையும் நவீனமயமாக்க வழிவகுத்தது. இது Hutch தனது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கட்டுப்படியான விலையில் சிறந்த மொபைல் புரோட்பேண்ட் அனுபவத்தை தொடர்ந்தும் வழங்க உதவும்.