காதலர் தின பருவ காலத்தில் Hutch இடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள்

காதலர் தினத்தை முன்னிட்டு பெப்ரவரி மாதத்தில் Hutch ஸ்ரீ லங்கா விசேட ஊக்குவிப்புத் திட்டமொன்றை தனது வாடிக்கையாளர்களுக்காக முன்னெடுத்திருந்தது.அன்பை கொண்டாடும் வகையில், Hutch call pack களை செயற்படுத்திய வாடிக்கையாளர்களுக்கு சுவை நிறைந்த இரவு உணவு வேளையை Pizza Hut இடமிருந்து வெற்றியீட்டுவதற்கான வாய்ப்பை Hutch வழங்கியிருந்தது. இதனூடாக காதலர் தினத்தை மேலும் விசேட தினமாகவும், நினைவில் நிலைத்திருக்கும் தினமாகவும் அமைந்திருக்க வழிகோலியது.இந்த பருவ காலப்பகுதியில் இணைந்து கொண்ட புதிய மற்றும் ஏற்கனவே காணப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு, இந்த விசேட ஊக்குவிப்புத் திட்டத்தில் பங்கேற்பதற்கான விசேட வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. 2,500 ரூபாய் பெறுமதி வாய்ந்த இந்த Pizza Hut வவுச்சர்களை வெற்றியீட்டுவதற்கு வாடிக்கையாளர்கள் Hutch call pack களை செயற்படுத்த வேண்டியிருந்தது.வாடிக்கையாளர்களின் தேவைகளை நன்கறிந்து சேவைகளை வழங்கும் Hutch, காதலர் தினம் மற்றும் அன்பை பகிர்ந்து கொள்ளும் மாதம் முழுவதும் தமது அன்புக்குரியவர்களுடன் தொடர்பை பேண விசேட கட்டணங்களை வழங்கியிருந்தது.இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டமை தொடர்பில் Hutch சந்தைப்படுத்தல் தலைமை அதிகாரி ஹம்தி ஹஸன் கருத்துத் தெரிவிக்கையில், ´உறவுகளை பேணுவதில் மொபைல் முக்கிய பங்கை வகிக்கின்றன. வருடம் முழுவதிலும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதில் Hutch புகழ்பெற்றுத் திகழ்கிறது. காதலர் தினத்துக்கான எமது ஊக்குவிப்புத் திட்டத்தினூடாக, Hutch தமது வாடிக்கையாளர்களை தமது அன்புக்குரியவர்களுடன் இணைப்பில் பேணி அன்பை பகிர்ந்து கொள்ளும் காலத்தை மனம்மறவாத வகையில் கொண்டாட வழிகோலியிருந்தது.´ என்றார்.வாடிக்கையாளர்களின் தேவைகள், செயற்பாடுகள் மற்றும் மாறுபட்ட கவனயீர்ப்புகளை நிவர்த்தி செய்யும் வகையில் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளில் மற்றுமொரு அங்கமாக இந்த ஊக்குவிப்புத் திட்டம் அமைந்திருந்தது.வவுச்சர் வெற்றியீட்டியிருந்த ஜனக ஜயந்த கருத்துத் தெரிவிக்கையில், ´எனக்கு உண்மையில் மகிழ்ச்சியாகவுள்ளது. இதுவே வெற்றியீட்டும் முதல் சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. இந்த இனிய அன்பளிப்பை வழங்கியமைக்காக நான் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கிறேன்.´ என்றார்.மற்றுமொரு வெற்றியாளரான ருவன் துஷார திஸாநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ´பத்து ஆண்டுகளுக்கு மேலாக வலையமைப்புடன் நான் இணைந்துள்ளேன். இதுபோன்றதொரு அன்பளிப்பை என்னால் வெற்றியீட்டக்கூடியதாக இருக்குமென நான் ஒரு போதும் கருதியதில்லை. இந்த சிறந்த வலையமைப்புடன் தொடர்ந்தும் நான் இணைந்திருப்பேன்.´ என்றார்.நாட்டு மக்கள் இணைப்பில் இருப்பதுடன், உயர் மொபைல் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் இயங்கும் Hutch ஸ்ரீ லங்கா, தனது வலையமைப்பை நாடு முழுவதிலும் படிப்படியாக 4பு வலையமைப்பாக விஸ்தரித்த வண்ணமுள்ளது.வெகுமதியை பெற்றுக் கொண்ட Hutch வாடிக்கையாளர்களில்;: கே.டபிள்யு.ஏ. சவினு ஜயதிலக, டபிள்யு.ரி. பிரதீப் தர்மசிறி, ருவன் துஷார, ஷெஹாரா சுமுது, கமில சதுரங்க, ஜனக ஜயந்த, கே.டி. திலகரத்ன, சதுனி பெர்னான்டோ, கே. எரந்திகா மதுமாலி, ஐ.பி. லக்மால் புஷ்பகுமார, நதீஷா ருவந்தி ஹெகொடகமகே, ஏ.எல். ருசெய்ன் மொஹமட், டி.எம். நயன மஞ்சுள துனுகர, கே.எம். மதுஷ் கசுந்தக தில்ஷான், டபிள்யு.பி.டி. பெர்னான்டோ, டி. சஞ்ஜீவ சமன் குமார மற்றும் கே.ஜி.ஏ. நிசன்சலா சஞ்ஜீவனி. ஆகியோர் அடங்கியிருந்தனர்.