எந்த வலையமைப்பிற்கும் ‘ஒரே கட்டணம்’

பதிவிறக்கம் செய்க

Hutch நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, புதிய சம கட்டண தீர்மானத்திற்காக தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவிற்குப் பாராட்டு

உங்களுடைய வலையமைப்பிற்கு வெளியில் உள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த அதிக கட்டணத்தை இனிமேலும் செலுத்த வேண்டியதில்லை

நாட்டின் தொலைதொடர்பாடல் ஒழுக்காற்று அதிகார சபையான தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழு, 2016 பெப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய சம கட்டண வீதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வலையமைப்பிற்கு உள்ளே மற்றும் வலையமைப்பிற்கு வெளியே என முன்பு இருந்த இரட்டை கட்டண வீத முறைமையின் கீழ் வாடிக்கையாளர்கள் தமது வலையமைப்பிற்கு வெளியிலுள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதற்கு வலையமைப்பின் உள்ளே அழைப்பிற்காக செலுத்தும் கட்டணத்தை விடவும் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தது.

வேறு ஒரு வலையமைப்பின் கீழ் இணைப்பைக் கொண்டிருந்த தமது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அதிகமான கட்டணத்தை செலுத்த வேண்டியிருந்தமையால், இந்த இரட்டை கட்டண முறைமை கைத்தொலைபேசி வாடிக்கையாளர்கள் மத்தியில் ஏராளமான குழப்பங்களையும், சிரமங்களையும் ஏற்படுத்தியிருந்தது.

வாடிக்கையாளர்கள் தற்போது எந்த வலையமைப்பின் கீழ், எந்தவொரு இலக்கத்திற்கும் அழைப்பினை மேற்கொள்ளும் போதும் ஒரே கட்டண வீதமே அறவிடப்படுகின்றது என்பதை அறிந்து நிம்மதியடைய முடியும். மேலும் தமது வலையமைப்பிற்கு வெளியிலுள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அதிக கட்டணத்தைச் செலுத்த வேண்டும் என்ற கவலையை விடுத்து, வாடிக்கையாளர்கள் தற்போது தாங்கள் விரும்புகின்ற எந்தவொரு கைத்தொலைபேசி சேவை வழங்கல் வலையமைப்பையும் தெரிவுசெய்து கொள்ள முடியும்.

இந்த கட்டண முறைமை தற்போது உள்ள இணைப்புக்களுக்கு சுயமாகவே கிடைக்கப்பெறாவிடினும், தற்போதைய வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பும் பட்சத்தில் புதிய சம கட்டண வீத முறைமைக்கு தங்களது தற்போதைய இணைப்புக்களை மாற்றிக்கொள்ள முடியும். தற்போதைய வாடிக்கையாளர் தளத்தை புதிய சம கட்டண வீதத்திற்கு மாற்றியமைப்பதற்குத் தேவையான ஏற்பாட்டு வசதிகளை தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக் குழு தற்போது ஆராய்ந்து வருவதுடன், இது தொடர்பில் வெகு விரைவில் உரிய தீர்மானத்தையும் அறிவிக்கவுள்ளது.

மிகச்சிறந்த பெறுமதி கொண்ட சேவை மற்றும் வெளிப்படையான தொழிற்பாடு ஆகியவற்றை வழங்குவதில் எப்போதும் முன்னிலை வகித்துவந்துள்ள Hutch, இந்த பயனை தனது வாடிக்கையாளர்களுக்கு உடனடியாகவே அமுல்படுத்தியுள்ளது. Hutch மேலும் ஒரு படி மேலே சென்று, ´செக்கன்´ அடிப்படையிலான கட்டண வீதத்தை அறவிடுவதுடன், இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் தாங்கள் அழைப்பை மேற்கொண்ட உண்மையான நேரத்திற்குரிய கட்டணத்தை மட்டும் செலுத்தி, அழைப்பிற்கான உச்ச பயனை அனுபவிப்பதற்கும் இடமளிக்கின்றது. வாடிக்கையாளர்கள் எந்தவொரு வலையமைப்பிற்கும் அழைப்பினை மேற்கொள்ளும் போதும் செக்கன் ஒன்றுக்கு ரூபா 0.03 என்ற அடிப்படையில் மட்டுமே அழைப்புக்களுக்கான கட்டணம் அறவிடப்படும்.

மேற்கொள்ளப்படுகின்ற அழைப்புக்களில் 65% இற்கும் அதிகமானவை ஒரு நிமிடத்திற்கு உட்பட்ட அழைப்புக்களாக உள்ளமையால், அழைப்புக்களுக்கான சம கட்டண வீத முறைமையின் இணைந்த அனுகூலத்துடன் Hutch நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச சேமிப்பை வழங்குவதற்கு இடமளிக்கும்.

தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த புதிய தீர்மானம் தொடர்பில் தனது கருத்தைத் தெரிவித்த Hutchison Telecommunications Sri Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா அவர்கள் ´வாடிக்கையாளர்கள் தங்களுக்கு மிகச் சிறந்த உற்பத்திகள் மற்றும் சேவையை வழங்குகின்ற சேவை வழங்குனரை தாம் விரும்பியவாறு சுதந்திரமாகச் தெரிவுசெய்வதற்கு வாய்ப்புக் கிட்டியுள்ளமையால் உள்நாட்டு அழைப்புக் கட்டண முறைமையை எளிமைப்படுத்தும் தொலைதொடர்பாடல்கள் ஒழுக்காற்று ஆணைக்குழுவின் முயற்சிகளுக்கு Hutch நிறுவனம் தனது பூரண ஆதரவை வழங்கும்´ என்று குறிப்பிட்டார்.

´மிகச் சிறந்த தரத்தில் தேசிய 3G சேவைகளை வழங்குவதில் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள Hutch, தற்போது முழுமையான மற்றும் நியாயமான கட்டணத்தில் கைத்தொலைபேசி சேவை அனுபவத்தை வழங்குகின்ற குரல் சேவையை போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சம கட்டணத்தில் வழங்குவதற்கு முடிந்துள்ளது´ என்று நடராசா அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

Flat Rate