Hutch cliQதற்போது 4G இல்

இலங்கையின் மிகவும் விரும்பப்படும் மொபைல் புரோட்பேண்ட் சேவையான Hutch Telecommunications, தனது பிரபலமானcliQ app இனை மேம்படுத்தி மீள் அறிமுகம் செய்தமையின் மூலம், 078 மற்றும் 072 சந்தாதார்கள் தற்போது எல்லையற்ற இணையத்தை நாடு முழுவதும் கிடைக்கும் அதன் பாரிய மற்றும் மேம்பட்ட 4G வலையமைப்பின் மூலம் அனுபவித்து மகிழலாம்.

072 சந்தாதாரர்கள் 2017 ஆம் ஆண்டு முதல் Cliq 3G ஐ பயன்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு Etisalat Sri Lanka நிறுவனத்தை Hutchகையகப்படுத்தி பின்னர் நாடு முழுவதும் 4G வலையமைப்பை ஸ்தாபித்தமையை தொடர்ந்து, புதிய Cliq app தற்போது 078 மற்றும் 072 இரண்டு சந்தாதாரர்களுக்கும் Cliq 4G ஐ வழங்கும் பொருட்டு Hutch இனால் வழி செய்யப்பட்டுள்ளது.

cliQஎன்பது மொபைல் அப்ளிகேஷனாகும். இதன் மூலம் பயனர்கள்  கால அடிப்படையிலான இணைய பெக்கேஜ்களை வசதியாக கொள்வனவு செய்ய முடிவதுடன், அவர்களின் ஸ்மார்ட்போன்களில் எல்லையற்ற இணைய அனுபவத்தை பெற்று மகிழலாம்.

இது மெகாபைட் மற்றும் ஜிகாபைட் என்ற டேட்டா முறைகளை தவிர்த்து,  கால அடிப்படையிலான தொகுதிகளாக இணைய அணுகலை வழங்குகின்றது. எனவே, பாவனையாளர்கள் மன அமைதியுடன், மீதமுள்ள டேட்டா மீதி தொடர்பில் எவ்வித கவலையுமின்றி இணைய பாவனையில் ஈடுபடமுடியும்.

இந்த அப்ளிகேஷன் Google Playstore ,  ioSஸ்மார்ட்போன் பாவனையாளர்களுக்கு App Store இலும், Huawei  பாவனையாளர்களுக்கு AppGalleryஇலும் கிடைக்கின்றது.

முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் இருசாராருக்குமான, 30 நிமிடங்கள் முதல் 30 நாட்கள் வரையான 3ஜி மற்றும் 4G  cliQதிட்டங்களை உங்கள் விருப்பதுக்கு ஏற்ப கொள்வனவு செய்வதன் மூலம் தமது 3G அல்லது 4G சாதனங்கள் மூலம் வசதியாக, எல்லைகளின்றி இணையத்தில் உலாவர cliQவழி செய்கின்றது.

” cliQஐ புதிய 4Gக்கு செயற்படுத்தியதன் மூலம், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக, மேலும் அணுகலுடன் மற்றும் வசதியான மொபைல் தரவு இணைப்பை  வழங்கும் எங்கள் வாக்குறுதியை பூர்த்தி செய்ய முடிந்துள்ளது,” என பெறுமதி சேர் சேவைகள் மற்றும் டிஜிட்டல் துறையின் உதவிப் பொது முகாமையாளரான யாதவ் மதியாபரணம் குறிப்பிட்டார்.

கொவிட் 19 காலப்பகுதியில் இலங்கை அஞ்சல் திணைக்களத்துடன் இணைந்து ஆதரவை விஸ்தரிக்கும் Hutch

நாடு முழுவதும் ரீசார்ஜ் அட்டைகளை விநியோகிக்க பங்காண்மையில் கைச்சாத்திட்டது

 

இலங்கையில் கொவிட்–19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான ஜனாதிபதி செயலணியின் வேண்டுகோளுக்கிணங்க, தகவல் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் உயர் கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சுடன் இணைந்து,  மிகவும் அவசியமான ரீசார்ஜ் அட்டைகளை அனைத்து இலங்கையர்களினதும் வீட்டு வாசலுக்கே விநியோகிக்கும் பொருட்டு HUTCH நிறுவனம் இலங்கை அஞ்சல் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.

இந்த HUTCH ரீலோட் அட்டை சேவையானது 078  மற்றும் 072  இரு சந்தாதாரர்களுக்குமானதென்பதுடன், இவை ஒரு வருடம் வரையான செல்லுபடியாகும் காலத்தைக் கொண்டதாகும். இது தற்போதைய சவாலான காலத்தில் வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதற்கு உதவுகிறது.

HUTCH சந்தாதாரர்கள் அருகிலுள்ள அஞ்சல் நிலையத்துடன் ஒருங்கிணைந்து, அஞ்சல் துறையால் விநியோகிக்கப்படும் மருத்துவ பொதிகளுடன் தங்கள் ரீசார்ஜ் அட்டைகளையும் பெற்றுக்கொள்ள முடியும். நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தபால் நிலையங்களில் HUTCH ரீசார்ஜ் அட்டைகள் கிடைப்பதற்கு வழிசெய்யப்படவுள்ளது. இந்த பங்காண்மை மூலமாக,  வாடிக்கையாளர்களின் மருத்துவ தேவைகளுடன் ரீசார்ஜ் அட்டைகளையும் அஞ்சல் நிலையங்கள் ஊடாக விநியோகிக்க HUTCH திட்டமிட்டுள்ளது. பின்னர் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான அஞ்சல் நிலையங்கள் மற்றும் உப அஞ்சல் நிலையங்கள் ஊடாகவும் ஒரு முழுமையான விநியோக பொறிமுறையைத் தொடங்கவுள்ளது.

இந்த முயற்சியானது இலங்கை முழுவதும் உள்ள 15 பிராந்திய அலுவலகங்கள், 653 பிரதான அஞ்சல் நிலையங்கள் மற்றும் 3410 உப அஞ்சல் நிலையங்களை உள்ளடக்குவதன் மூலம் HUTCH வாடிக்கையாளர்கள் வீட்டிலிருந்தவாறே ரீசார்ஜ் அட்டைகளை கொள்வனவு செய்வதனை இலகுவாக்குகின்றது.

“இந்த சூழ்நிலைக்கு பொறுப்பான அரச அதிகாரிகளான, எமது சுகாதாரத்துறை மற்றும் அஞ்சல் திணைக்களத்தினால் வழிகாட்டப்படும் இந்த கௌரவமான முயற்சிகளின் பங்காளராக இருப்பது தொடர்பில் பெருமையடைகின்றோம். ஒரு பொறுப்பான கூட்டாண்மை பிரஜையாக, மிகவும் சவாலான இக் காலக்கட்டத்தில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள எங்கள் பெறுமதிமிக்க வாடிக்கையாளர்களின் அனைத்து தொடர்பாடல் தேவைகளையும் வலுப்படுத்தும் மேலுமொரு முயற்சியில்  இணைந்துள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பை எளிதாக்குவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக தகவல் மற்றும் வெகுசன ஊடகம் அமைச்சர் மற்றும் உயர் கல்வி, தொழிநுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கௌரவ. பந்துல குணவர்தன மற்றும் அஞ்சல் திணைக்களத்துக்கு, எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். நாடு இயல்பு நிலையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இலங்கை முழுவதும் மிகவும் கட்டுப்படியாகும் விலையிலான இப் பெறுமதி சேர் வழங்கலை தொடர எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என, HUTCH நிறுவனத்தின் விற்பனைப் பிரிவிற்கான பொது முகாமையாளர், மனோஜ் குமார் மோசஸ் தெரிவித்தார்.

கொவிட் 19 வீட்டிலிருக்கும் காலப்பகுதியில், இலங்கை அஞ்சல் திணைக்களம் ஒசு சலவுடன் இணைந்து Whatsapp, Viber மற்றும் MMS ஆகியவற்றின் மூலமாக மருந்துகளை வீடுகளுக்கே விநியோகிக்கும் பொறிமுறையை ஏற்பாடு செய்துள்ளது. சுகாதார அமைச்சு நாடுபூராகவும் உள்ள மருந்தகங்களை அங்கீகரித்துள்ளதுடன், இந்தப் பட்டியலை www.health.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும்.

அஞ்சல் திணைக்களத்துடனான இந்த முக்கிய இணைவானது நாடு முழுவதும் HUTCH இன் அணுகலை மேலும் விரிவுபடுத்துவதுடன், ” Bigger and Better” தெரிவாக மாற்றுவதுடன்,  “Be. Anywhere” என்ற HUTCH இன் வர்த்தகநாம பெறுமான நிலைத்தோற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்றது.

வாடிக்கையாளர்களின் பின்னூட்டலுக்கு கவனம் செலுத்தி இரவு நேர ஒதுக்கீடின்றி 100% Anytime டேட்டாவை வழங்கும் Hutch

இன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு முக்கிய அறிவிப்பின் பிரகாரம், Hutch தனது சந்தாதாரர்களுக்கு 100% Anytime டேட்டா பெக்கேஜ்களை, எவ்வித இரவு நேர ஒதுக்கீடும் இல்லாமல் வழங்க  ஆரம்பித்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களின் இரவு நேர ஒதுக்கீட்டை அணுகுவதற்கு நள்ளிரவு வரை இனி காத்திருக்கவோ, பகல் நேரத்தில் பயன்படுத்த ஒதுக்கீடுகள் தீர்ந்து விடும் என்று கவலைப்படவோ தேவையில்லை. Hutch Anytime டேட்டா புரட்சியுடன், தற்போது முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்கள் தமது முழு டேட்டா ஒதுக்கீட்டை பயன்படுத்தவும், நாளின் எந்த நேரத்திலும் இணையத்தில் அதிக சுதந்திரத்துடன் உலாவரும் சந்தர்ப்பத்தையும் பெறுகின்றனர்.

அனைத்து Hutch 078 & 072 சந்தாதாரர்களும் *131# ஐ டயல் செய்து இந்த பெக்கேஜ்களை செயற்படுத்திக்கொள்ள முடியுமென்பதுடன், இது 3G மற்றும் 4G  ஆகிய இரு பாவனையாளர்களுக்கும் கிடைக்கின்றது. இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Hutch Anytime டேட்டா திட்டங்கள், 600MB இற்கு ரூபா. 47, 1.3GB இற்கு ரூபா. 97, 3GB இற்கு ரூபா. 197, 4.7 GB இற்கு ரூபா. 297, 8.2GB இற்கு ரூபா. 497, 12GB இற்கு ரூபா. 647 மற்றும் 20GB இற்கு ரூபா. 997 போன்ற பெக்கேஜ்களை உள்ளடக்குவதுடன், வாடிக்கையாளர்களுக்கு வசதியானவற்றை வழங்கும் அதன் வாக்குறுதியை மேலும் உறுதிப்படுத்துகிறது

இந்த முயற்சியானது  வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற தயாரிப்புகளை வழங்குவதற்கான Hutch இன் தொடர்ச்சியான முயற்சிகளையும், சிறந்த பெறுமதியான தயாரிப்புகளை வழங்குவதில் அதன் அர்ப்பணிப்பையும் மீண்டும் எடுத்துக்காட்டுகிறது. இந்த முயற்சியானது மொபைல் சந்தாதாரர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL) துரிதமாக அங்கீகரிக்கப்பட்டது.

“உணர்வுமிக்க கூட்டாண்மை நிறுவனம் என்ற வகையில், Hutch எப்போதும் வாடிக்கையாளர்கள் எம்மிடம் கூறுவதை செவிமடுத்துள்ளது. அவர்களின் கவலைகளைப் புரிந்துகொள்வதும், அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் Hutch இன் வாழ்க்கைக்கான ஒரு முறையாகும். அனைத்து இலங்கையர்களின் கவலைகளையும், ஏமாற்றங்களையும் நாங்கள் கேள்விப்பட்டுள்ளோம். அவர்கள் இனி பகல் / இரவு டேட்டா ஒதுக்கீட்டைப் பற்றியும்,  இரவு ஒதுக்கீடு வீணாவதாகவும் கவலைப்பட தேவையில்லை. புதிய 100% Anytime டேட்டா பெக்கேஜ்கள் வேகமாக வளர்ந்து வரும் எங்கள் சந்தாதாரர் தளத்திற்கு பாரிய நிவாரணம், மன அமைதி மற்றும் வசதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd இன் சந்தைப்படுத்தல் பிரிவின் தலைமை அதிகாரியான ரம்சீனா தெரிவித்தார்.

COVID – 19 இனால் நாடு சவால்களை எதிர்கொண்டுள்ள இந் நேரத்தில், இந்த முயற்சியானது நிவாரணத்தின் மற்றொரு வரவேற்கத்தக்க படியாக அமைந்துள்ளது. இந்த Anytime டேட்டா பக்கேஜ்கள்,  பாவனையாளர்கள் நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் முழுமையாக தகவல்களை பெற்றிருக்கவும், அவர்களின் அன்புக்குரியவர்களுடன் இணைந்திருக்கவும், தேவைப்படும் போது அவர்களின் இரவு ஒதுக்கீட்டை பற்றி கவலைப்படாமல் வீட்டிலிருந்து அவர்களின் பணி நடவடிக்கைகளைத் தொடரவும் உதவும்.

மேலும் Hutch ரூபா.15 இலவச நாளாந்த நிவாரண ரீலோட் சலுகையை ஏப்ரல் 7, 2020 வரை நீட்டித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. கிரடிட் மீதி முடிவடைந்த அனைத்து Hutch 078 & 072 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கும், குறிப்பாக வீட்டிலிருந்து வேலை செய்யும் இக் காலப்பகுதியில், இந்த சேவை கிடைக்கிறது. இந்த நிவாரண ரீலோட்டை எந்த நேரத்திலும் டேட்டா, எந்த வலையமைப்புகளுக்குமான அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்கும் பயன்படுத்த முடியும். இன்றுவரை 500,000 க்கும் மேற்பட்ட Hutch சந்தாதாரர்கள் இந்த ரூபா.15 நிவாரண அனுகூலத்தை பெற்றுள்ளமை தொடர்பில் Hutch பெருமிதம் கொள்கிறது, இது அவர்கள் தொடர்ந்து இணைந்திருக்க வாய்ப்பளிக்கின்றது.

COVID 19 ஆபத்தை மட்டுப்படுத்த தனது சந்தாதாரர்களுக்கு நாளாந்தம் இலவச நிவாரண ரீலோட்டாக ரூபா. 15 ஐ வழங்கும் Hutch

வாடிக்கையாளர்களின் சிறந்த நலன்களுக்கான அதன் நீண்டகால அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கும் முகமாக, HUTCH இன்றைய தினம் மேலுமொரு முக்கிய முயற்சியினை அறிமுகப்படுத்தியது. COVID-19 நெருக்கடியில் நாடு சிக்கியுள்ள நிலையில் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான தொடர்ச்சியையும், அணுகலையும் இதன் மூலம் உறுதி செய்கிறது.

இந்த புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள முயற்சியானது, 078 மற்றும் 072 முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது கணக்கு மீதி முடிவடையும் போது ரூபா. 15 ஐ நாளாந்த இலவச நிவாரண ரீலோட்டாக வழங்குகின்றது. இந்த நிவாரண ரீலோட்டை anytime டேட்டாவாக, எந்தவொரு வலையமைப்புக்குமான அழைப்பாக மற்றும் எஸ்.எம்.எஸ் சேவைகளுக்காக உபயோகிக்க முடியும்.

இலங்கை மக்களிடையே COVID-19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நடைமுறையில் உள்ள கடுமையான ஊரடங்கு நிலைமையினால்,  பல சந்தாதாரர்கள் தங்கள் கணக்குகளை ரீலோட் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கியிருக்கலாம். இந்த இடைக்கால சலுகையானது அனைத்து Hutch முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களும் தற்போதைய முடக்கல் நிலையில் தொடர்ந்து இணைந்திருக்க உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்கள் தங்கள் Hutch இணைப்பில் தினமும் *288# ஐ டயல் செய்வதன் மூலம் இந்த இலவச நிவாரண ரீலோட்டைப் பெறலாம். இந்த சேவை மார்ச் 26 முதல் 2020 மார்ச் 31 வரை வழங்கப்படுகின்றது.

“பல முற்கொடுப்பனவு சந்தாதாரர்களுக்கு தங்கள் போன்களை வழக்கமான முறைகளைப் பயன்படுத்தி ரீலோட் செய்வது கடினமாக உள்ளதை நாம் இணங்கண்டுள்ளோம். மேலும் அவர்களுக்கு ஒன்லைன் முறை மூலமாகவும் ரீலோட் மேற்கொள்ளக் கூடிய வசதி இல்லாமல் இருக்கலாம். இந்த நிவாரண ரீலோட் முற்றிலும் இலவசம். இது கடன் அல்ல, வாடிக்கையாளர்கள் அதை திருப்பிச் செலுத்துவது குறித்து கவலைப்பட தேவையில்லை. இந்த அனுகூலமானது, எங்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்த வண்ணம், தற்போதைய சூழ்நிலையைப் பற்றி எல்லா நேரங்களிலும் அறிந்து வைத்துக்கொள்ளும் பொருட்டு தடையற்ற இணைப்பைக் கொண்டிருக்க உதவுமென நாம் நம்புகின்றோம். இந்த முயற்சிக்கு உடனடியாக உதவியளித்த TRCSL இற்கு நாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்” என HUTCH இன் பிரதான நிறைவேற்று அதிகாரி, திருக்குமார் நடராசா தெரிவித்தார்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையகத்துடன் (TRCSL) நெருக்கமாக இணைந்து, Hutch நிறுவனம் COVID – 19 வைரஸுக்கு எதிராகப் போராடுவதற்கு, மக்களை வலுவாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதற்கு ஊக்குவிக்கும் பொருட்டு பல சரியான மற்றும் கட்டுப்படியாகும் முயற்சிகளை ‘வீட்டில் இருந்து வேலை செய்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் முன்னெடுத்துள்ளது. இது கால அடிப்படையிலான எல்லையற்ற இணையம் மற்றும் யுடியூப் பக்கேஜ்கள், anytime டேட்டா பொதிகள், மேம்படுத்தப்பட்ட எயார்டைம் கடன்கள் நீட்டிப்பு,  மாற்று இலத்திரனியல் ரீசார்ஜிங் சேனல்கள், புதிய OTT அடிப்படையிலான வாடிக்கையாளர் சேவை சேனல்கள் மற்றும் பல்கலைக்கழக eLearn சேவைகளுக்கான இலவச அனுமதி என பல வசதிகளை உள்ளடக்கியுள்ளது. ‘வீட்டிலிருந்து வேலை செய்வோம்’ என்ற முயற்சி தொடர்பில் மேலதிக தகவல்களை www.hutch.lk.  என்ற இணைய முகவரியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

பல விசேட முயற்சிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் வீட்டிலிருந்து பணியாற்றுவதனை ஊக்குவிப்பதில் அரசாங்கத்தை ஆதரிக்கும் Hutch

வீட்டிலிருந்து பணியாற்றும் ஆரம்பகட்ட முயற்சியினை முன்னெடுப்பதன் மூலம், COVID-19  வைரஸ் பரவுவதைத் தடுக்க மக்களை தனிமைப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட விசேட அறிக்கையின் மூலமாக Hutch நிறுவனமானது,  சந்தாதாரர்கள் தகவல்களை அறிந்து வைத்திருக்க தொடர்ச்சியாக இணைந்திருப்பதற்கும், அவர்களின் நாளாந்த செயற்பாடுகளை வீட்டிலிருந்தவாறு தொடரவும் வழிகோலும் பல புதுமையான முயற்சிகளை விரைவாக முன்னெடுப்பதன் மூலம் அரசாங்கத்தின் முயற்சிகளில் தான் பங்கெடுத்துள்ளமை தொடர்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றது.

இந்த முதல் முயற்சியானது,  Hutch சந்தாதாரர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டிய அவசியமின்றி, மொபைல் சேவைகளை அணுகுவதற்காக தொடர்ந்து airtime கிரெடிட்டினை பெற்றுக்கொள்வதனை உறுதி செய்வதாகும். இந்த வகையில் Hutch தனது ஒன்லைன் ரீசார்ஜ் வசதியை Hutch இணையத்தளத்தின் மூலம் உபயோகிப்பதனையும், அதன் Hutch Self Care app அப்ளிகேஷன் மூலம் பக்கேஜ்களை வசதியாக கொள்வனவு செய்வதனையும் ஊக்குவிப்பதோடு,  அதன் சந்தாதாரர்களுக்கு மேம்பட்ட airtime கடன்களையும் வழங்கின்றது. Hutch தனது https://online.hutch.lk/hopp/ இணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு ரீலோட் மற்றும் கட்டணப்பட்டியல் செலுத்துகைக்கு 10% போனஸ் சலுகையை வழங்கி ஊக்குவிக்கின்றது. இந்த சலுகை  2020 மார்ச் 31 வரை அனைத்து முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்புகளுக்கும் செல்லுபடியாகும்.

இரண்டாவதாக, வழக்கமான முகவர்களால் செயற்படுத்தப்படும் அழைப்பு நிலையங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அணுகலை மாத்திரமே வழங்கும் நிலையில், Hutch சந்தாதாரர்கள் தங்களது அவசர கேள்விகளுக்காக வாட்ஸ்அப், வைபர், எஸ்.எம்.எஸ் மற்றும் மின்னஞ்சல் ஊடாக Hutch பிரதிநிதிகளைத் தொடர்ந்து தொடர்புகொள்ள முடிவதுடன், அங்கு உங்கள் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்கப்படும்.

TRCL  உடன் இணைந்து Hutch பல புதுமையான முற்கொடுப்பனவு தயாரிப்புகளை ஊக்குவித்துள்ளது. இது அனைத்து Hutch சந்தாதாரர்களும் எப்போதும் இணைந்திருக்க வழிகோலும். கால அடிப்படையிலான எல்லையற்ற இணையத்தை வழங்கும் CliQ 3G, விசேட 25% கழிவுடன் வழங்கப்படும். டேட்டா ஒதுக்கீடு முடிவடைகின்றமை தொடர்பில் கவலையின்றி குடும்பத்திற்கு அறிவூட்டுவதுடன், பொழுதுபோக்காகவும் வைத்திருக்க 30 நாட்களுக்கு எல்லையற்ற YouTube வழங்கப்படுகிறது. அதன் சந்தாதாரர்களுக்கு அதிகபட்ச ஒதுக்கீட்டு பெறுமதி மற்றும் நெகிழ்வுத்தன்மையை வழங்கும் 100% Anytime  தரவு பொதிகளை அறிமுகப்படுத்திய முதல் இயக்குனர் Hutch என்பது குறிப்பிடத்தக்கது.

Hutch, TRCSL  உடன் இணைந்து அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் eLEARN இற்கான இலவச அணுகலை விரிவுபடுத்தியுள்ளதன் மூலம் மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றல் நடவடிக்கைகளைத் தொடர உதவுகிறது.

Hutch அதன் நாடு தழுவிய 4 ஜி உட்பட, புதிய பெரிய மற்றும் மேம்பட்ட வலையமைப்புடன் இலங்கையில் COVID-19 வைரஸை எதிர்ப்பதில் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதில் பெருமையடைகின்றது.

“இந்த நெருக்கடி நிலையில் பல்வேறு சமூக இணைப்புத் தேவைகளை நிவர்த்தி செய்யும் காத்திரமான நடவடிக்கைகளுக்காக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் (TRCSL ) மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாங்கள் குறிப்பாக பாராட்ட விரும்புகிறோம்,” என Hutch இன் தலைமை நிர்வாக அதிகாரியான திரு. திருக்குமார் நடராசா தெரிவித்தார்.

Walawa Supercross வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளது

Walawa Supercross மோட்டார் பந்தய நிகழ்வானது 2019 செப்டெம்பர் 22 அன்று வெற்றிகரமாக நிறைவுற்றுள்ளதுடன், இதற்கான உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக HUTCH செயற்பட்டுள்ளது.

இப்பந்தய நிகழ்வானது உடவளவ சுப்பர் குரொஸ் பந்தயத்திடலில் இடம்பெற்றுள்ளதுடன், இலங்கை மோட்டார் பந்தயக் கழகத்தடன் இணைந்து இலங்கை மின்னியல் மற்றும் எந்திரவியல் பொறியியலாளர் படைப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் திகைப்பூட்டும் பந்தய அனுபவங்களை வழங்கும் வகையில் ஆண்டுதோறும் இடம்பெறுகின்ற நிகழ்வுகளுள் ஒன்றாக இது பிரபலம் பெற்றுள்ளது.

HUTCH நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான ரம்ஸீனா மொர்செத் லாய் அவர்கள் நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளதுடன், வெற்றியாளர்களுக்கான விருதுகளையும் வழங்கியுள்ளார்.

இலங்கை இராணுவ ரக்பி அணிக்கு அனுசரணை வழங்கும் HUTCH

Hutchison Telecommunications Lanka (Pvt) Ltd நிறுவனமானது இலங்கை இராணுவ ரக்பி அணியின் பிரதான அனுசரணையாளராக, இலங்கை இராணுவத்துடன் கைகோர்த்துள்ளது.

இலங்கை இராணுவ ரக்பி வீரர்களின் திறமையை மேம்படுத்தும் பொதுக் குறிக்கோளை Hutch மற்றும் இலங்கை இராணுவத்திற்கிடையிலான இந்த பங்குடமை ஒப்பந்தமானது வரையறுப்பதுடன், இலங்கையில் ரக்பி விளையாட்டையும் வலுப்படுத்துகின்றது.

Hutch எப்போதும் பல்வேறு சமூகப் பிரிவுகளை ஆதரிப்பதில் மிகுந்த உற்சாகத்தையும், ஆர்வத்தையும் காட்டியுள்ளதுடன், பல ஆண்டுகளாக Hutch விளையாட்டுத்துறையில் ஆர்வம் காட்டி வருகின்றது.

HUTCH வலுவூட்டலுடன் இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான 56 ஆவது தடகள சுற்றுப்போட்டி

´இராணுவ படைப்பிரிவுகளுக்கு இடையிலான 56 ஆவது தடகள சுற்றுப்போட்டி 2019´ நிகழ்வானது அண்மையில் கொழும்பு சுகததாச அரங்கில் இடம்பெற்றுள்ளதுடன், இதற்கான பிரதான அனுசரணையை HUTCH வழங்கியுள்ளது. இராணுவத்தின் 24 படைப்பிரிவுகளின் தலைமையகங்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தின் 800 வரையான அனுபவம் வாய்ந்த இளம் தடகள வீர,வீராங்கனைகள் இந்த வருடாந்த நிகழ்வில் பங்குபற்றியுள்ளதுடன், 3 தினங்களாக இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் தட மற்றும் கள நிகழ்வுகள் அடங்கியிருந்தன.

இலங்கை இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, Hutchison Telecommunications Lanka (Pvt) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திருக்குமார் நடராசா, Hutchison Telecommunications (Pvt) Ltd நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை தலைமை அதிகாரியான ரம்ஸீனா மொர்செத் லாய் மற்றும் பல பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இலங்கையில் முதலாவது முற்றுமுழுதான Network Function Virtualization (NFV)ஐ செயற்படுத்திய HUTCH

இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் தொலைத்தொடர்பாடல் வழங்குனரான HUTCH,  வல்பொலவில் அமைந்துள்ள தனது உயர் தொழில்நுட்ப மையத்தை முற்றிலும் நவீனமயப்படுத்தப்பட்டதாக மேம்படுத்தியதன் மூலம் சந்தையில் தனக்கான இடத்தை வலுப்படுத்தியுள்ளது.

அதன் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதிசெய்துகொண்டு, HUTCH,அண்மையில் மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனது உயர்ந்த 4G வலையமைப்பை ஸ்தாபித்ததுடன்,  தற்போது நாடு பூராகவும் அதனை செயற்படுத்தி வருகின்றது. இந்தச் செயன்முறையின் ஊடாக, HUTCH முதலாவது முற்று முழுதான  NFV (Network Function Virtualization)ஐ அடிப்படையாகக் கொண்ட மூல வலையமைப்பை செயற்படுத்தியுள்ளதுடன், இத் தொழில்நுட்பமானது இயக்குனர்கள் தமது பாரம்பரிய வன்பொருள் அடிப்படையிலான வலையமைப்பில் இருந்து வெளியேறி தொலைத்தொடர்பாடல் சேவைகளுக்கு பொதுவான தகவல் தொழில்நுட்ப சேர்வர்களை நோக்கி நகர அனுமதிக்கும். இந்த செயற்படுத்தல் மூலம் தொலைத் தொடர்பு பயன்பாடுகளுக்கென வடிவமைக்கப்பட்ட அனைத்து சிறப்பு அமைப்புகளும் எந்தவொரு நியமமான தகவல் தொடர்பாடல் சேர்வரிலும் இயங்கும், இது நெகிழ்வுத்தன்மை, விரைவான செயற்படுத்தல் மற்றும் மேம்படுத்துவதில் குறைந்த மூலதன செலவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கின்றது,  மேலும் அவை விரைவாக மாறிவரும் தொழில்நுட்பத் துறையில் அத்தியாவசிய அம்சங்களாகும்.

முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு ஆகிய அறவிடல் அமைப்புகள் ஒரே மேடையில் இயங்கக்கூடிய மிகவும் மேம்பட்ட  இணைந்த அறவிடல் அமைப்பை NFV (Network Function Virtualization)ஐ செயற்படுத்தவுள்ளது. இது இந்தவொரு தனிநபர் அல்லது நிறுவன பயனர் தமது தேவைக்கேற்ற தனித்துவமான பக்கேஜை வரையறுக்க நெகிழ்வுத்தன்மையை அளிக்கின்றது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த HUTCH Sri Lanka இன் பிரதான நிறைவேற்று அதிகாரி திருக்குமார் நடராசா, ” உயர் மேம்பாடடைந்த மூல வலையமைப்பு மற்ரும் இணைந்த அறவிடல் அமைப்பை இலங்கையில் செயற்படுத்துகின்றமையானது, HUTCHஅதன் சந்தாதாரர்களுக்கு சிறந்த மற்றும் மேம்பட்ட சேவைகளை வழங்குவதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றது.  முழு நாட்டுக்கும் கட்டுப்படியாகும் விலையில் புரோட்பேண்ட் சேவைகளை வழங்க உதவும் நாடுபூராவுமான 4G வலையமைப்பை நிறுவும் செயற்பாடும் இதனோடு முன்னெடுக்கப்படுகின்றது. HUTCHஇன் கீழான Etisalat 2G/3G இன் கையகப்படுத்தல் மற்ரும் ஒருங்கிணைப்பானது இறுதியாக போட்டித்தன்மை மிக்க 2G மற்றும் 3G சேவைகளை நாடுபூராகவும் முக்கிய போட்டியாளர்களுக்கு இணையாக வழங்கும். எனவே HUTCH தற்போது போட்டித்தன்மை மிக்க மாற்றீடான மொபைல் சேவையை சந்தைக்கு வழங்கமுடியுமாக இருப்பது தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்”, என்றார்.

BID2WIN வெற்றியாளர்களுக்கு ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள்களை பரிசளிக்கும் HUTCH

2019 ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான HUTCH இன் BID2WIN வின் மெகா பிரச்சார வெற்றியாளர்கள், குருநாகலைச் சேர்ந்த திரு. துஷி குமார் மற்றும் தெமடகொடையைச் திரு மொஹமட் துவான் ஆகியோருக்கு சமீபத்தில் HUTCH அதிகாரிகளால் புதிய ஹொண்டா ஸ்கூட்டி மோட்டார் சைக்கிள்கள் பரிசளிக்கப்பட்டன.

இலங்கையின் மிகப் பெரிய குறுந்தகவல் கேமிங் சேவையான BID2WIN, எந்தவொரு மொபைல் வாடிக்கையாளருக்கும் அவர்கள் விரும்பிய பெறுமதியை குறித்த காலப்பகுதிக்கென ஒதுக்கப்பட்ட பரிசின் பொருட்டு முன்வைக்க முடியுமென்பதுடன், மிகக் குறைந்த தனித்துவமான விலைகோருபவர் பரிசை இலவசமாக வெல்லும் வாய்ப்புபைப் பெறுவார்.

BID2WIN கேமிங் சேவை தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தனது சந்தாதாரர்களுக்கு பரிசுகளை வழங்குவதுடன், ரூபா. 20 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான கார்கள், மோட்டார் சைக்கிள்கள், மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களை வழங்கியுள்ளமைக்காக நன்கறியப்பட்டது. இந்த ஊக்குவிப்பு Zmessenger இனால் வலுவூட்டப்பட்டது.