உங்கள் பிள்ளைகளுக்கு இணையத்தளம் என்பது உண்மையில் பாதுகாப்பான பகுதியா?

ஆபத்தான பொருளடக்கங்கள் வடிவில் இணையத்தில் காணப்படும் சில விடயங்களால் எழக்கூடிய அபாயங்கள் பற்றி வயது வந்தவர் எனும் வகையில் நீங்கள் நன்கு அறிந்துள்ளீர்கள்.

வயதுவந்தவர்களுக்கான உள்ளடக்கங்கள் மற்றும் வன்முறை, வயது வந்தவர்கள் சிறுவர்களைப் போல பாசாங்கு செய்து உங்களின் பிரத்தியேக தகவல்களைப் பெற்று உங்கள் பிள்ளைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மற்றும் in-app கொள்வனவுகள் போன்றன மேற்பார்வையின்றி இணையத்தை சிறுவர்கள் பயன்படுத்தும் போது எதிர்கொள்ளக்கூடிய சில ஆபத்துகளாக அமைந்துள்ளன.

நவீன கால வாழ்க்கைமுறை மற்றும் கேள்விகளுக்கமைய, உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையிலிருந்து சாதனங்களை இல்லாமல் செய்வது மற்றும் இணையத்தை பயன்படுத்துவதை முழுமையாகக் கட்டுப்படுத்துவது என்பது முற்றிலும் நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாக அமைநை்துள்ளது. ஒன்லைன் கல்வி, கற்றல் வீடியோக்கள் மற்றும் பொருளடக்கங்கள் போன்றவற்றுடன் ஒன்லைன் ஒப்படைகள் போன்றன நவீன கால மாணவர்களின் வாழ்க்கையில் ஒன்றித்துள்ளன.

வயது வந்தவர் எனும் வகையில், உங்களின் வேலைப்பளு நிறைந்த வாழ்க்கைச் செயற்பாடுகளுடன், உங்கள் பிள்ளையின் ஒன்லைன் நடத்தை எந்நேரமும் கண்காணிப்பது என்பது இயலாத காரியமாக உள்ளது.

எனவே நீங்கள் உங்களின் வாழ்க்கையில் எழும் சவால்களை சமாளித்த வண்ணமிருக்கையில், உங்கள் பிள்ளைக்கு பாதுகாப்பான ஒன்லைன் பயன்பாட்டை எவ்வாறு உறுதி செய்து கொள்ள முடியும்?

image

அறிமுகமாகும் HUTCH Junior Internet Guard!

இலங்கையில் முதன் முறையாக, தொலைத்தொடர்பு சேவை வழங்குநரிடமிருந்து, உங்களின் பிள்ளைகள் ஒன்லைனில் செலவிடும் நேரத்தில் அவர்களைப் பாதுகாப்பது, பின்தொடர்வது மற்றும் புரிந்து கொள்வது தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய தீர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. HUTCH Junior Internet Guard உடன் உங்கள் பிள்ளைக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான இணையப் பாவனை அனுபவத்தை எம்மால் வழங்க முடியும்.

பாதுகாப்பான இணையம்

இணையம் என்பது பெருமளவு இணையத்தளங்கள் மற்றும் appகளைக் கொண்ட பரந்த வலையமைப்பு என்பதுடன், அதன் உள்ளடக்கங்கள் உங்கள் பிள்ளையின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு அனுகூலமளிப்பதாக அமைந்திருக்கலாம்.

உச்ச பாதுகாப்பு

வழமையான பெற்றோர்களால் கட்டுப்படுத்தும் app களை போலன்றி, HUTCH Junior Internet Guard இனூடாக உங்கள் பிள்ளையின் சாதனத்தில் எந்தவொரு app ஐயும் install செய்ய வேண்டியதில்லை.

டேட்டா ஒழுங்குபடுத்தல்

நாளொன்றுக்கு பயன்படுத்தக்கூடிய ஆகக்கூடிய டேட்டா எல்லையை நிர்ணயிப்பதுடன், உங்கள் பிள்ளை ஒன்லைனில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்துங்கள்.

இலவசமாக 30 நாள் பயன்படுத்தும் காலம்!

முதல் 30 நாட்களுக்கு இந்தச் சேவையை முற்றிலும் இலவசமாக பயன்படுத்துவதுடன், அதன் பின்னர் மாதாந்தம் 200 ரூபாய் எனும் சாதாரண கட்டணத்தில் வழங்கப்படும்.

எனவே இணைந்திடுங்கள்! Junior Internet Guard Hutch உடன் உங்கள் பிள்ளைக்கு ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் பொறுப்பு வாய்ந்த இணையப் பாவனை பழக்கங்களை ஏற்படுத்தி, இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவதை உறுதி செய்யுங்கள்.

HUTCH Junior Internet Guard விளக்கங்கள்

புதிய HUTCH App ஐ டவுன்லோட் செய்து இந்தச் சேவைக்கு பதிவு செய்து கொள்ளுங்கள்

பெற்றோர் மற்றும் பிள்ளைக்கு வேறான இணைப்புகளுடன் பதிவு செய்வதற்கு

image

பிள்ளையுடனான இணைப்புக்கு பதிவு செய்வதற்கு

image

டேட்டா பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு

image

நேரக் கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கு

image

அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

Junior Internet guard என்பது HUTCH மொபைல் இலக்கமொன்றைப் பயன்படுத்தும் போது, உங்கள் பிள்ளையின் இணையப் பிரசன்னத்தை நிர்வகித்துக் கொள்ளவும், ஆபத்தான மற்றும் பொருத்தமற்ற பொருளடக்கங்களிலிருந்து அவர்களை பாதுகாத்திட உதவும் வகையிலும் அமைந்த சேவையாகும். இந்தச் சேவையினூடாக உங்கள் பிள்ளையின் இணைய அணுகலை ஒழுங்குபடுத்திக் கொள்ள உதவுவதுடன், அளவுக்கதிகமான பாவனையை கட்டுப்படுத்தவும், மாதாந்தம் உங்கள் பிள்ளை இணையத்தில் செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும் உதவியாக அமைந்திருக்கும்.

பின்வருவனவற்றிலிருந்து உங்களுக்கு அனுகூலங்கள் கிடைக்கும் :
 • பாதுகாப்பான இணையம் – ஆபத்தான அல்லது பொருத்தமற்ற பொருளடக்கத்தை நீங்கள் அணுகுவதிலிருந்து உங்களை பாதுகாப்பதற்கு அது உதவியாக அமைந்திருக்கும்.
 • தினசரி பயன்படுத்தக்கூடிய டேட்டாவின் ஆகக்கூடிய கோட்டா எல்லைப் பெறுமதிகளை நிர்ணயிப்பது.
 • வாரத்தின் தெரிவு செய்யப்பட்ட தினங்களில் குறிப்பிட்ட நேரத்தினுள் இணையத்தை பயன்படுத்தக்கூடிய கட்டுப்பாடுகளை நிர்ணயித்தல்.
 • HUTCH app இனூடாக இந்த சேவையை நிர்வகிக்கும் வசதி மற்றும் எளிமையான கட்டமைப்பில் மேற்படி சேவைகளுடன் தொடர்புடைய தகவல்களை பார்வையிடல்.

Hutch app – உங்கள் பிள்ளையின் கணக்கை நிர்வகிப்பதற்கு Hutch app தேவை என்பதால், இந்த சேவையை செயற்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்ட தெரிவு முறையாகும்;

side menu இல் காணப்படும் ‘Junior Internet Guard’என்பதை க்ளிக் செய்து இந்தச் சேவைக்கு பதிவு செய்து கொள்ளலாம் அல்லது திரையின் கீழ் பகுதியில் காணப்படும் shortcuts menu இலுள்ள ‘Junior Internet’ icon க்ளிக் செய்யலாம்.

USSD – *131# டயல் செய்து செயற்படுத்தலாம்

இதனூடாக பொருளடக்கம் வடிகட்டப்படுவது மாத்திரமே இடம்பெறும். Junior Internet Guard உள்ளம்சங்களை நிர்வகிப்பதற்கு, நீங்கள் Hutch App ஐ பயன்படுத்த வேண்டும்.

ஆம், உங்கள் பிள்ளையின் இலக்கத்தினூடாக உங்களால் ‘Parent & Child’ இலக்கமாக பதிந்து, இந்தச் சேவைக்கு பதிவு செய்து கொள்ள முடியும். எவ்வாறாயினும், பிள்ளையினால் பெற்றோர் கட்டுப்பாட்டு (parental controls) அம்சங்களை அணுகக்கூடிய வசதிகள் காணப்படுவதால், இந்த முறை பாதுகாப்பானதாக அமைந்திருக்காது. இந்த நிலையை தவிர்த்துக் கொள்வதற்கு, பெற்றோர் மற்றும் பிள்ளையின் கோவைகள் இரு வேறுபட்ட இலக்கங்களில் இருப்பதை நாம் பரிந்துரைக்கின்றோம்.

ஆம், உங்கள் இலக்கத்தை ‘Parent & Child’ இலக்கமாக பதிந்து, இந்தச் சேவைக்கு பதிவு செய்து கொள்ளலாம். எவ்வாறாயினும், நீங்கள் பயன்படுத்தும் போதும் பாதுகாப்பான இணையம் மற்றும் பெற்றோர் கட்டுப்பாட்டு விதிமுறைகள் செயலில் இருக்கும். இந்த நிலையை தவிர்த்துக் கொள்வதற்கு, பெற்றோர் மற்றும் பிள்ளையின் கோவைகள் இரு வேறுபட்ட இலக்கங்களில் இருப்பதை நாம் பரிந்துரைக்கின்றோம்.

ஆம், இந்தச் சேவையை பயன்படுத்துவதற்கு, பெற்றோர் மற்றும் பிள்ளையின் இலக்கங்கள் கண்டிப்பாக Hutch இணைப்புகளாக இருக்க வேண்டும்.

ஆம், ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளால் பயன்படுத்தப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளுக்காக இந்தச் சேவைக்கு பதிவு செய்து கொள்ள முடியும். சேவையில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு இணைப்புக்கும் கட்டணம் அறவிடப்படும்.

ஆம், இந்தச் சேவை முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு பாவனையாளர்களுக்கும் கிடைக்கும்.

பதிவு செய்யும் போது, உங்கள் தொலைபேசி இலக்கத்தில் இந்தச் சேவையை செயற்படுத்திக் கொள்ளும் தெரிவு உங்களுக்குக் காணப்படும் என்பதுடன், பெற்றோர் மற்றும் பிள்ளை இலக்கங்கள் ஒன்றானதாக இருக்கலாம் அல்லது மாறுபட்ட இலக்கத்துக்கும் இந்தச் சேவையை செயற்படுத்திக் கொள்ளலாம், அதில் நீங்கள் பெற்றோராகவும், இரண்டாம் இலக்கம் பிள்ளையாகவும் அடையாளப்படுத்தப்படும்.

பெற்றோர் இலக்கமாக நீங்கள் நிர்ணயித்த எந்தவொரு இலக்கமும், Hutch app இனூடாக பெற்றோர் கட்டுப்பாடுகள் மற்றும் பாவனைக் காண்காணிப்பை மேற்கொள்ளும் வரப்பிரசாதங்களைக் கொண்டிருக்கும்.

பிள்ளையின் இலக்கத்தில் பாதுகாப்பான இணைய நிபந்தனைகள் பிரயோகிக்கப்படும் (பெற்றோர் மற்றும் பிள்ளைக்காக ஒரே இலக்கம் பதிவிடப்பட்டிருந்தால், அதே இலக்கத்தின் மீது நிர்வகிப்பு விதிமுறை மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறை போன்றன நிர்ணயிக்கப்பட்டிருக்கும்).

இந்தச் சேவையினூடாக உங்கள் பிள்ளையின் டேட்டா பாவனையை தினசரி எல்லைப் பெறுமதிகளை பிரயோகித்து கட்டுப்படுத்த முடியும். பின்வரும் முறையில் தினசரி எல்லைப் பெறுமதிகளை உங்களால் நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கும்;

 • ஒட்டுமொத்த தினசரி கோட்டா எல்லையை நிர்ணயித்தல்: பிரயோகிக்கப்படும் எல்லைப் பெறுமதியானது, தினசரி பயன்படுத்த அனுமதிக்கப்படும் டேட்டா அளவாக இருக்கும். உதாரணமாக, மொத்தமாக அனுமதியளிக்கப்பட்ட அளவு 2GB ஆக இருந்தால், பிள்ளையின் இணைப்பு 2GB ஐ எய்தியதும், அன்றைய தினம் நள்ளிரவு வரை இணையத்தை பயன்படுத்துவது தடைப்படும்.
 • அப்ளிகேஷன் அடிப்படையில் தினசரி கோட்டாவை நிர்ணயிப்பது: புகழ்பெற்ற அப்ளிகேஷன்களில் பயன்படுத்துவதற்கான டேட்டா அளவை உங்களால் நிர்ணயிக்க முடியும். உதாரணமாக, நாளாந்தம் YouTube பார்வையிட 1GB எல்லைப் பெறுமதியாக நிர்ணயித்தால், சேவையினால் அப்ளிகேஷன்களில் (உதாரணமாக: Facebook, YouTube, Netflix, TikTok, WhatsApp) கோட்டா பயன்பாட்டை கண்காணித்து, குறித்த அப்ளிகேஷனில் அந்த எல்லையை எய்தியதும் பாவனை தடைப்படுத்தப்படும்.

குறிப்பு: இரு பிரிவுகளிலும் எல்லைகளை நீங்கள் நிர்ணயித்திருந்தால், ஒட்டுமொத்த தினசரி கோட்டா எல்லைப் பெறுமதி என்பது அப்ளிகேஷன் அடிப்படையிலான கட்டுப்பாட்டை விஞ்சியதாக செயற்படும்.

தினசரி எல்லைப் பெறுமதிகளை நிர்ணயித்து இணையத்தில் உங்கள் பிள்ளை செலவிடும் நேரத்தை கட்டுப்படுத்திக் கொள்ள அல்லது குறிப்பிட்ட நேரப் பகுதியில் பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதற்கு இந்த சேவை உதவியாக அமைந்திருக்கும்.

 • இணையத்தில் இணைப்பிலிருப்பதை கட்டுப்படுத்தும் தினசரி நேர எல்லைகளை நிர்ணயித்தல்: நிர்ணயிக்கப்படும் எல்லைப் பகுதியானது, பிள்ளை இணையத்தில் செலவிடும் மொத்த நேரமாக அமைந்திருக்கும். உதாரணமாக, மொத்தமாக அனுமதிக்கப்படும் நேரம் 2 மணித்தியாலங்கள் என நீங்கள் நிர்ணயித்திருந்தால், பிள்ளை மொத்தமாக இணையத்தை பயன்படுத்தும் நேரத்தை இணைப்பு கணித்து அதன் பிரகாரம் அனுமதிக்கும்.
 • நாளொன்றில் குறிப்பிட்ட காலப்பகுதியில் இணையப் பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதித்தல்: நாளொன்றில் குறித்த நேரப் பகுதிகளுக்கு அணுகல் கட்டுப்பாடுகளை நிர்ணயிப்பதற்கு உங்களால் முடியும். உதாரணம்: பின்னிரவு முதல் காலை வரை இணையத்தை ஒட்டு மொத்தமாக நீங்கள் தடை செய்யலாம் அல்லது Facebook, YouTube, Netflix, TikTok, WhatsApp போன்ற புகழ்பெற்ற appகளுக்கும் தடை செய்யலாம்.

பாதுகாப்பான இணைய சேவை செயற்படுத்தப்பட்டதும், சிறுவர்கள் மற்றும் பராயமடையாதவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு இணையத்தளங்களையும் அல்லது அப்ளிகேஷன்களையும் மொபைல் இலக்கம் அணுகுவதை தடுக்கும். சிறுவர்களுக்கு இணையத்தை பாதுகாப்பான பகுதியாக பேணுவதில் நிபுணத்துவம் பெற்ற IWF மற்றும் BPJM போன்ற சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற அமைப்புகளினால் கட்டுப்படுத்தப்படும் பொருளடக்கங்கள் பற்றிய நிர்வகிப்புகள் மேற்கொள்ளப்படும்.

பின்வரும் பொருளடக்கம் அல்லது appகள் ஆபத்தான பொருளடக்கப் பிரிவுகளாக கருதப்படுகின்றன;

 • வயதுவந்தவர்களுக்கான மற்றும் பாலுறவு உள்ளடக்கங்கள்
 • சிறுவர் பாலியல் வன்முறையுடன் தொடர்புடைய இணையத்தளங்கள்
 • வைரஸ் மற்றும் மல்வெயார் பிஷிங்
 • போதைப் பொருட்கள், அற்ககோல் மற்றும் புகையிலை போன்றவற்றை விற்பனை செய்யும் அல்லது விளம்பரம் செய்யும் இணையத்தளங்கள்
 • இனவன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும்
 • ஒன்லைன் டேட்டிங் தளங்கள்
 • சூதாட்டத்துடன் தொடர்புடைய இணையத்தளங்கள்
 • இதர பொருத்தமற்ற பொருளடக்கத் தளங்கள்

** YouTube அல்லது TikTok போன்ற பாதுகாப்பான அப்ளிகேஷன்களில் காணப்படும் பொருளடக்கங்களை இந்த சேவையினூடாக வடிகட்ட முடியாது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

பாதுகாப்பான இணைய உள்ளம்சம் என்பது பின்வரும் சந்தர்ப்பங்களில் பொருந்தாது;

a. பாதுகாப்பானது என கருதப்படும் பொருளடக்கத்தை பிள்ளையின் இணைப்பு அணுகும் போது, அப்ளிகேஷனினுள் காணப்படும் பொருளடக்கத்தை கண்காணிக்கும் திறனை பாதுகாப்பான இணையம் கொண்டிருக்காது.

உதாரணம், பிள்ளை YouTube app ஐ பயன்படுத்தினால், அது பாதுகாப்பான app என்பதால், app இனுள் காணப்படும் பொருளடக்கத்தை இந்த சேவையினூடாக வடிகட்ட முடியாது. Facebook மற்றும் TikTok போன்ற app களிலும் இது பொருத்தமானதாக இருக்கும்.

b. பிள்ளையின் இணைப்பு, இணையத்தை பயன்படுத்துவதற்கு VPN இணைப்பை பயன்படுத்துமாயின், பிள்ளையினால் பயன்படுத்தும் பொருளடக்கத்தை இது இந்தச் சேவையிலிருந்து மறைத்துவிடும். எனவே, இந்த சேவையை மறைப்பதற்காக, உங்கள் பிள்ளையின் சாதனத்தில் ஏதேனும் VPN அப்ளிகேஷன்கள் பதிவிடப்பட்டுள்ளனவா என்பதை அவதானிக்கவும். VPNகளை பயன்படுத்தும் பாவனையாளர்களை இனங்காண்பதற்கு எம்மாலான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இணையத்தில் தொடர்ச்சியாக மேம்படுத்தப்படும் appகளின் காரணமாக, இந்த விடயம் தொடர்பில்பெற்றோரும் கண்ணும் கருத்துமாக இருப்பதை நாம் எதிர்பார்க்கின்றோம்.

இணையம் என்பது பரந்தளவில் காணப்படும் பகுதி என்பதுடன் எந்நேரமும் அறிமுகம் செய்யப்படும் புதிய இணையத்தளங்கள் மற்றும் அப்ளிகேஷன்களால், எமது பங்காளர்களால் அவ்வாறான பொருளடக்கங்களை இனங்காண்பதில் தாமதங்கள் எழக்கூடும். ஆனாலும் கட்டமைப்பில் நீங்கள் சுயமாக இவ்வாறான இணையத்தளங்கள் பற்றிய தகவல்களை பதிவேற்ற முடியும், பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றலாம்:

Open Hutch app ➡ Junior Internet ➡ Advanced tab ➡ Report Website

அத்துடன், எமது வடிகட்டல் விதிமுறைகளை கடந்து செல்லக்கூடிய ஏதேனும் 3ஆம் தரப்பு VPN appகளை உங்கள் சாதனம் கொண்டிருக்காததை உறுதி செய்து கொள்ளவும்.

உங்கள் பிள்ளையின் டேட்டா பாவனையை பொருடக்கப் பிரிவின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்து வழங்கும் அறிக்கையாக அமைந்துள்ளதுடன், ஒட்டுமொத்த தரப்படுத்தலையும் வழங்கும். இந்தத் தரப்படுத்தல் என்பது உங்கள் பிள்ளைக்கு பொறுப்பு வாய்ந்த இணையப் பாவனையாளர்களாகத் திகழ்வதற்கு அவசியமான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் வழிமுறையாக மாத்திரம் அமைந்திருக்கும்.

அவ்வாறான இணையத்தளங்கள் அல்லது app கள் குறித்த சாதனத்தில் இயங்காது, மேலும், ‘Advanced’ பிரிவில் காணப்படும் get alert service என்பதை செயற்படுத்தியிருந்தால், உங்களுக்கு SMS மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அவ்வாறான முயற்சிகள் பற்றிய அறிவித்தல்கள் வழங்கப்படும்.

கட்டணப் பட்டியலுடன் தொடர்புபட்ட அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

இந்த சேவை முதல் மாதம் சகல வாடிக்கையாளர்களுக்கும் பரீட்சார்த்த காலமாக, இலவசமாக வழங்கப்படும். அதன் பின்னர், மொபைல் இணைப்பொன்றுக்கு மாதாந்தம் ரூ. 200 எனும் சாதாரண கட்டணத்தில் வழங்கப்படும் (வரிகள் அடங்கலாக)

இரண்டாம் மாதத்திலிருந்து, இணைப்பொன்றுக்கு உங்களிடமிருந்து ரூ. 200 அறவிடப்படும்.

இணைக்கப்பட்ட பிள்ளைகளின் இலக்கங்களுக்கு சேவைக் கட்டணம் அறவிடப்படும் என்பதால், இந்தச் சேவையை புதுப்பிப்பதற்கு போதியளவு கணக்கு மீதி இருப்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்.

காணப்படும் மீதிக்கமைய போதியளவு நாட்களுக்கு நாம் கட்டணம் அறவிடுவதுடன், சம்பந்தப்பட்ட கட்டணப் பட்டியல் பெறுமதிக்கு பொருத்தமான நாட்களுக்கு சேவையை வழங்குவோம்.

உதாரணமாக, உங்கள் பிள்ளையின் இலக்கத்தில் ரூ. 100 மாத்திரம் மீதி காணப்பட்டால், கணனிக் கட்டமைப்பினால் ரூ. 93.38 அறவிடப்பட்டு, Junior internet சேவை 14 நாட்களுக்கு மாத்திரம் உங்கள் பிள்ளையின் இலக்கத்தில் செயல் நிலையில் இருக்கும். 15 ஆம் நாளன்று பதிவை புதுப்பிப்பதற்கு முயற்சிக்கும்.

Junior Internet Guard dashboard க்கு சென்று தற்போதைய சேவையின் நிலைவரம் மற்றும் அடுத்த கட்டணப் பட்டியல் திகதி போன்றவற்றை பார்வையிடலாம்.

நீங்கள் சேவையை தொடர்ந்தும் அனுபவிப்பதற்காக, கடன் அடிப்படையில் இந்த சேவையை 5 நாட்களுக்கு நாம் புதுப்பிப்பதுடன், ரீசார்ஜ் செய்தால் அல்லது கட்டணப் பட்டியல் கொடுப்பனவு மேற்கொள்ளும் போது அதற்கான கட்டணத்தை அறவிடுவோம்.

கடன் அடிப்படையில் 5 நாட்களுக்கு வழங்கப்படும் சேவைக்கான கட்டணம் ரூ. 33.35 ஆகும்.

5 நாள் கடன் காலப் பகுதி நிறைவடைந்ததும், எம்மால் கடன் தொகையையும், புதுப்பிக்க வேண்டிய கட்டணத்தையும் எம்மால் பெற்றுக் கொள்ளும் வரையில் ஆகக்குறைந்தது 1 நாளைக்காவது சேவையை இடைநிறுத்துவோம்.