நாட்டின் வேகமாக வளர்ந்து வரும், கையடக்கத் தொலைபேசி தகவல்தொடர்பு சேவைகள் வழங்கும் பாவனையாளர் தெரிவான Hutch, இலங்கையில் உள்ள சமூக வலைத்தள பாவனையாளர்களுக்காக, ‘Non-Stop Super Combo’ (இடைவிடாத சுப்பர் கூட்டு) எனப்படும் TikTok உள்ளிட்ட பல சமூக வலைத்தளங்களை அணுகக் கூடிய அதன் புத்தம் புதிய சமூக வலைத்தள இணையப் பொதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Hutch இன் சலுகைகளில் இந்த சமீபத்திய சேர்க்கையானது, முதன்முறையாக இலங்கையில் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் சமூகவலைத்தளமான ‘TikTok’ ஐ வரையறையற்ற வகையில் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. TikTok ஆனது உலகளாவிய ரீதியில் 700 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுடன் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. அத்துடன் இலங்கையில் ஒரு மில்லியன் பயனர்களை அது கடந்துள்ளது. அதன் விரைவான வளர்ச்சிக்கு காரணம், அது கொண்டுள்ள அதன் உயர் பண்பான ‘குறுகிய வீடியோ’ வடிவமாகும். இது பயனர்களை 3 நிமிடங்களுக்கு மேற்படாமல் வீடியோவை பதிவிட உதவுகிறது. அத்துடன் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உரிய பயனர்களிடம் அவர்கள் விரும்பும் தெரிவுகளை கொண்டு சேர்க்கும் திறனின் அடிப்படையில் செயற்படுகிறது.

இந்த புதிய பொதியில் TikTok அறிமுகப்படுத்தப்படும் அதே வேளையில், Instagram, Facebook, FB Messenger, Whatsapp, Telegram, Viber, Imo, YouTube போன்ற பல உலகப் புகழ்பெற்ற சமூக ஊடக செயலிகளுக்கான வரையறையற்ற அணுகலையும் இந்தத் திட்டம் கொண்டுள்ளது.

Non-stop Super Combo பொதியானது, மிகச் சிக்கனமான மாதாந்த ரீதியிலான கட்டணமான ரூ. 439 எனும் விலையில் கிடைக்கின்றது. இதன் மூலம் ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள், தங்களுக்குப் பிடித்தமான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதனால் ஏற்படும் அதிக பயன்பாட்டுச் செலவுகளைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை.

இந்த சமீபத்திய தரவுத் திட்டம் குறித்து கருத்துத் தெரிவித்த, HUTCH நிறுவனத்தின் Data, Digital & VAS இற்கான உதவி பொது முகாமையாளர் யார்தவ் மதியபரணம், “இலங்கையில் உள்ள முன்னோக்கிச் சிந்திக்கும் கையடக்கத் தொலைபேசி தொடர்பாடல் சேவை வழங்குனர் எனும் வகையில், எமது சேவைகள் மூலம் மதிப்பையும் உரிய பொருத்தப்பாட்டையும் நாம் தொடர்ந்தும் வழங்கி வருகிறோம். சமூக வலைத்தள செயலிகளை அணுகுவதற்காக இன்று பல்வேறு தரவுத் திட்டங்களைப் பயன்படுத்தும் இலங்கையில் உள்ள சமூக வலைத்தள பயனர்கள், TikTok இன் அறிமுகத்துடன் இணைந்தவாறு ஏனைய சமூக வலைத்தள செயலிகளை கொண்டுள்ள இந்த Non-Stop Super Combo பொதியை கொள்வனவு செய்வதன் மூலம் தங்கு தடையற்ற சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் அனுபவத்தை பெற முடியும்.

தடையற்ற ஸ்மார்ட்போன் அனுபவத்திற்காக, இந்த திட்டத்தை 4G மற்றும் 3G ஆகிய இரு வலையமைப்புகளிலும் HUTCH வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் முற்கொடுப்பனவு அல்லது பிற்கொடுப்பனவு இணைப்பின் ஊடாக, *131# இலக்கத்தை அழைப்பதன் மூலம் அல்லது HUTCH App மூலம் அல்லது பொதியின் பெறுமதியை ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த பொதியை செயற்படுத்திக் கொள்ளலாம்.